தென்றலே தென்றலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோ, பி.உன்னிகிருஷ்ணன் & டொமினிக் செரிஜோஏ.ஆர்.ரகுமான்காதல் தேசம்

Thendrale Thendrale Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு…
பூவுடன் மெல்ல நீ பேசு…
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு…
பூவுடன் மெல்ல நீ பேசு…

ஆண் : கரையின் மடியில் நதியும் தூங்கும்…
கவலை மறந்து தூங்கு…
இரவின் மடியில் உலகம் தூங்கும்…
இனிய கனவில் தூங்கு…

ஆண் : தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு…
பூவுடன் மெல்ல நீ பேசு…

—BGM—

ஆண் : காதல் என்றால் கவலையா…
கண்ணில் நீரின் திவலையா…
நோயானேன் உயிரும் நீ யானேன்…

ஆண் : இரவில் காயும் முழு நிலா…
எனக்கு மட்டும் சுடும் நிலா…
வாராயோ எனை நீ சேராயோ…

ஆண் : தூங்க வைக்கும் நிலவே…
தூக்கமின்றி நீயே வாடினாயோ…

ஆண் : தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு…
பூவுடன் மெல்ல நீ பேசு…

—BGM—

ஆண் : மாலை வானில் கதிரும் சாயும்…
மடியில் சாய்ந்து தூங்கடா…
பூமி யாவும் தூங்கும் போது…
பூவை நீயும் தூங்கடா…

ஆண் : மலரின் காதல் பனிக்கு தெரியும்…
என் மனதின் காதல் தெரியுமா…
சொல்ல வார்த்தை கோடிதான்…
உனை நேரில் கண்டால் மௌனம் ஏன்…

ஆண் : தூங்க வைக்க பாடினேன்…
நான் தூக்கமின்றி வாடினேன்…

ஆண் : தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு…
பூவுடன் மெல்ல நீ பேசு…
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு…
பூவுடன் மெல்ல நீ பேசு…

—BGM—


Notes : Thendrale Thendrale Song Lyrics in Tamil. This Song from Kadhal Desam (1996). Song Lyrics penned by Vaali. தென்றலே தென்றலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading