ஓ வெண்ணிலா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபி. உன்னிகிருஷ்ணன்ஏ.ஆர்.ரகுமான்காதல் தேசம்

O Vennila Song Lyrics in Tamil


ஆண் : ஓ வெண்ணிலா இரு வானிலா… நீ…
ஓ நண்பனே அறியாமலா… நான்…

ஆண் : கண்ணே கண்ணே காதல் செய்தாய்…
காதல் என்னும் பூவை நெய்தாய்…
நண்பன் அந்த பூவை கொய்தால்…
ஓ… நெஞ்சே நெஞ்சே நீயென் செய்வாய்…

ஆண் : ஓ வெண்ணிலா இரு வானிலா… நீ…

BGM

ஆண் : மழை நீரில் வானம் நனையாதம்மா…
விழி நீரில் பூமுகம் கரையாதம்மா…

ஆண் : எனைக் கேட்டு காதல் வரவில்லையே…
நான் சொல்லி காதல் விடவில்லையே…

ஆண் : மறந்தாலும் நெஞ்சம் மறக்காதம்மா…
இறந்தாலும் காதல் இறக்காதம்மா…

ஆண் : ஓ வெண்ணிலா இரு வானிலா… நீ…

BGM

ஆண் : இருக்கின்ற இதயம் ஒன்றல்லவா…
எனதல்ல அதுவும் உனதல்லவா…

ஆண் : எதை கேட்ட போதும் தரக்கூடுமே…
உயிர் கூட உனக்காய் விடகூடுமே…

ஆண் : தருகின்ற பொருளாய் காதல் இல்லை…
தந்தாலே காதல் காதல் இல்லை…

ஆண் : ஓ வெண்ணிலா இரு வானிலா… நீ…
ஓ நண்பனே அறியாமலா… நான்…

ஆண் : கண்ணே கண்ணே காதல் செய்தாய்…
காதல் என்னும் பூவை நெய்தாய்…
நண்பன் அந்த பூவை கொய்தால்…
ஓ… நெஞ்சே நெஞ்சே நீயென் செய்வாய்…


Notes : O Vennila Song Lyrics in Tamil. This Song from Kadhal Desam (1996). Song Lyrics penned by Vaali. ஓ வெண்ணிலா பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top