காத்துக்கு பூக்கள் சொந்தம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஹரிஹரன் & சுஜாதா மோகன்சிற்பிகண்ணன் வருவான்

Kaathukku Pookal Sondham Song Lyrics in Tamil


BGM

ஆண் : காத்துக்கு பூக்கள் சொந்தம்…
பூவுக்கு வாசம் சொந்தம்…
வாசத்துக்கு சொந்தக்காரி வருவாளா…
என் வாழ்க்கைக்கொரு அர்த்தம் சொல்லி தருவாளா…

BGM

ஆண் : தாலாட்டு கேட்கவும் இல்ல…
தாய் பாசம் பார்த்ததும் இல்ல…
எனக்கொரு சொந்தம் சொல்ல வருவாளா…
என் நெஞ்சுக்குள்ள மல்லிகைப் பூ தருவாளா…

BGM

ஆண் : பத்து விரலும் எனக்கு மாத்திரம்…
புல்லாங்குழலாய் மாற வேணுமே…
எந்த சாமி எனக்கு அந்த வரம் கொடுக்கும்…
நல்ல வரம் கொடுக்கும்…

ஆண் : மீனா மாறி நீரில் நீந்தனும்…
குயிலா மாறி விண்ணில் பறக்கணும்…
காத்தா மரமா பூவா நானும் வாழ்ந்திடனும்…
ஒருத்தி துணை வேணும்…

ஆண் : சாமி சிலைகள் நூறு ஆயிரம்…
செஞ்சு செஞ்சு நானும் வைக்கிறேன்…
சாமி ஒன்னு கண்ணு முழிச்சு பாத்திடுமா…
அவள காட்டிடுமா…

ஆண் : காத்துக்கு பூக்கள் சொந்தம்…
பூவுக்கு வாசம் சொந்தம்…
வாசத்துக்கு சொந்தக்காரி வருவாளா….
என் வாழ்க்கைக்கொரு அர்த்தம் சொல்லி தருவாளா…

BGM

ஆண் : மயிலே மயிலே தோகை தருவியா…
தோகை அதிலே சேலை நெய்யணும்…
யாருக்குன்னு மயிலே நீதான் கேட்காதே…
எனக்கு தெரியாதே…

ஆண் : நிலவே நிலவே விண்மீன் தருவியா…
விண்மீன் அதிலே வீடு கட்டணும்…
யாருக்குன்னு நிலவே நீதான் கேட்காதே…
எனக்கே தெரியாதே…

ஆண் : மரமே மரமே கிளைகள் தருவியா…
கிளையில் கிளிக்கு ஊஞ்சல் கட்டணும்…
யாரு அந்த கிளிதான் என்று கேட்காதே…
நெசமா தெரியாதே…

பெண் : காத்துக்கு பூக்கள் சொந்தம்…
பூவுக்கு வாசம்சொந்தம்…
வாசத்துக்கு சொந்தக்காரி வருவாளே…
உன் வாழ்க்கைக்கொரு அர்த்தம் சொல்லி தருவாளே…

BGM


Notes : Kaathukku Pookal Sondham Song Lyrics in Tamil. This Song from Kannan Varuvan (2000). Song Lyrics penned by Pa Vijay. காத்துக்கு பூக்கள் சொந்தம் பாடல் வரிகள்.


Scroll to Top