வெளக்கு வச்ச

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. காமராசன்எஸ். ஜானகி & இளையராஜாஇளையராஜாமுந்தானை முடிச்சு

Velakku Vetcha Song Lyrics in Tamil

பெண் : வெளக்கு வச்ச நேரத்திலே மாமன் வந்தான்…
வெளக்கு வச்ச நேரத்திலே மாமன் வந்தான்…
மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தாகம் என்றான்…

பெண் : நான் கொடுக்க அவன் குடிக்க…
அந்த நேரம் தேகம் சூடு ஏற…

ஆண் : வெளக்கு வச்ச நேரத்திலே தந்தானன்னா…
மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தரன்னான்னன்னா…

—BGM—

ஆண் : உச்சி வெயில் சாயும் நேரம்…
உதட்டோரம் ஈரம் ஏறும்…

பெண் : பச்சைப் புல்லும் பாயா மாறும்…
பசியேக்கம் தானாத் தீரும்…

ஆண் : ஓர விழி பார்க்கும் பார்வை…
போதை ஏறுது…

பெண் : நூறு முறை சேர்ந்த போதும்…
ஆசை கூடுது…

ஆண் : பொழுதாச்சு விளையாட…
ஒரு வாடைக் காத்து சூடு ஏத்தும்…

பெண் : வெளக்கு வச்ச நேரத்திலே மாமன் வந்தான்…
மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தாகம் என்றான்…

—BGM—

ஆண் : நித்தம் புது ராகம் கண்டு…
நான் பாடும் பாடல் நூறு…

பெண் : நீ படிச்ச வேகம் கண்டு…
நிலை மாறும் தேகம் பாரு…

ஆண் : நீல மயில் தோகை சூடி…
ஜாகை தேடுது…

பெண் : ஜாதி மலர் தேனில் ஊற…
ஜாடை கூறுது…

ஆண் : பொழுதாச்சு விளையாட…
ஒரு வாடைக் காத்து சூடு ஏத்தும்…

ஆண் : வெளக்கு வச்ச நேரத்திலே தந்தானன்னா…
மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தரன்னான்னன்னா…

பெண் : நான் கொடுக்க அவன் குடிக்க…
அந்த நேரம் தேகம் சூடு ஏற…

பெண் : வெளக்கு வச்ச நேரத்திலே மாமன் வந்தான்…
மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தாகம் என்றான்…

Notes : Velakku Vetcha Song Lyrics in Tamil. This Song from Mundhanai Mudichu (1983). Song Lyrics penned by Na. Kamarasan. வெளக்கு வச்ச பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading