அன்பு அலைபாயுதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்பி. உன்னிகிருஷ்ணன், மனுவேல் நௌயர், கார்த்திக், ரேஷ்மி & மாளவி கார்த்திகேயன்பரத்வாஜ்பிரியசகி

Anbu Alaipayuthey Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அன்பு அலைபாயுதே…
தென்றல் உலா போகுதே…
அன்பு அலை பாயுதே…
தென்றல் உலா போகுதே…

ஆண் : இந்த பூமியில் இது பொக்கிஷம்…
இதில் வாழ்வதே தினம் பரவசம்…
பல உறவுகள் இதில் கொஞ்சுதே…
அந்த சொர்கத்தை இது மிஞ்சுதே…
என்ன தவம் செய்தேனோ…

—BGM—

ஆண் : அன்பு அலை பாயுதே…
பெண் : பாயுதே பாயுதே பாயுதே…
ஆண் : தென்றல் உலா போகுதே…
பெண் : போகுதே போகுதே போகுதே…

—BGM—

ஆண் : பட்டாம் பூச்சிகள் எங்கள் தோட்டத்து பூக்களை…
காவல் காக்கிறதே…
பட்டு நிலவும் முற்றத்தில் தினம்…
வெள்ளை அடிக்க வருகிறதே…

ஆண் : கண்ணுக்கெட்டும் தூரம் வரையில்…
கவலை என்பது தெரியவில்லை…
விரும்பியதெல்லாம் கிடைப்பதனாலே…
கடவுளை தொல்லை செய்வதில்லை…

ஆண் : புன்னகை கீதம் எங்கள் கூட்டில்…
என்றும் கேட்குமே…
அன்பென்னும் வேதம் எங்கள் வாழ்வில்…
வீட்டு பாடமே…

—BGM—

ஆண் : அன்பு அலை பாயுதே…
பெண் : பாயுதே பாயுதே பாயுதே…
ஆண் : தென்றல் உலா போகுதே…
பெண் : போகுதே போகுதே போகுதே…

—BGM—

குழு : இன்பத்தை உருவாக்கி…
இரு கண்ணை மகனாக்கி…
பதினாறும் எனக்கருளினாய்…

குழு : இறைவா உனக்கென்ன நான் செய்வேன்…
உயிர் அன்றி வேறில்லை…
உன் பாதம் சமர்பிக்கவே…

குழு : இது போல எம் மக்கள் எந்நாளும் ஒன்றாகி…
உன் பாதம் பூஜிக்கவே…
அருள் வென்றும் என் சாமி…
தாய் உள்ளம் பூரிக்க…
தர வேண்டும் வரம் ஒன்று நீ…

—BGM—

ஆண் : இன்னொரு பிறவி மண்ணில் பிறந்தால்…
மீண்டும் நாங்களே உறவாவோம்…
விட்டு கொடுத்து வாழ்வதில் மட்டும்…
போட்டி போட்டு தினம் மகிழ்ந்திடுவோம்…

ஆண் : ஒருவர் மனதை ஒருவர் படித்து…
உறவை கவிதை ஆக்கிடுவோம்…
கனவில் கூட பிரிவென்னும் வார்த்தை…
கலந்து விடாமல் கதவடைப்போம்…

ஆண் : சந்தோஷம் யாவும்…
எங்கள் வீட்டை தேடி வந்ததே…
சங்கீதம் போல எங்கள்…
வாழ்க்கை மேன்மை ஆனதே…

—BGM—


Notes : Anbu AlaipayutheySong Lyrics in Tamil. This Song from Priyasakhi (2005). Song Lyrics penned by Snehan. அன்பு அலைபாயுதே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading