வருங்கால மன்னர்களே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம்சந்திரபோஸ்ராஜா சின்ன ரோஜா

Varungala Mannargale Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வருங்கால மன்னர்களே வாருங்கள்…
என் வார்த்தைகளை செவி கொடுத்து கேளுங்கள்…
குழு : லல்லல்லா…

ஆண் : வருங்கால மன்னர்களே வாருங்கள்…
என் வார்த்தைகளை செவி கொடுத்து கேளுங்கள்…
குழு : லல்லல்லா…

ஆண் : இருக்கும் வரைக்கும் ரெக்கை விரித்து…
பறக்க வேண்டும் தும்பிகளே…
இமைய மலையை இடுப்பில் சுமக்கும்…
இதயம் வேண்டும் தம்பிகளே… ஹோஓ…

ஆண் : வருங்கால மன்னர்களே வாருங்கள்…
என் வார்த்தைகளை செவி கொடுத்து கேளுங்கள்…
குழு : லல்லல்லா…

—BGM—

ஆண் : நண்பர்களை துயரத்திலே கண்டுகொள்ளலாம்…
நல்லவரை வறுமையிலே கண்டுகொள்ளலாம்…
வஞ்சகரை வார்த்தையிலே கண்டுகொள்ளலாம்…
மனைவியரை நோயினிலே கண்டுகொள்ளலாம்…

ஆண் : உங்களை உறுதியிலே கண்டுகொள்ளலாம்…
என்னை மட்டும் இறுதியிலே கண்டுகொள்ளலாம்…
என்னை மட்டும் இறுதியிலே கண்டுகொள்ளலாம்…

ஆண் : வருங்கால மன்னர்களே வாருங்கள்…
என் வார்த்தைகளை செவி குடுத்து கேளுங்கள்…
குழு : லல்லல்லா…

—BGM—

ஆண் : புகை புடிக்கும் போதை தண்ணி…
விட்டு விடுங்கள்…
போன காலம் போகட்டுமே…
திருந்தி நில்லுங்கள்…

ஆண் : அப்பன் பாட்டன் சொத்தை கொஞ்சம்…
தள்ளி வெய்யுங்கள்…
சொந்தாமாக வேர்வை சிந்தி…
சோறு தின்னுங்கள்…

ஆண் : சுற்றி ஒரு பகை எழுந்தால்…
வாளை எடுங்கள்… ஹான்…
தோள் கொடுப்பேன் எனக்கும் ஒரு…
ஓலை விடுங்கள்…
தோள் கொடுப்பேன் எனக்கும் ஒரு…
ஓலை விடுங்கள்…

ஆண் : வருங்கால மன்னர்களே வாருங்கள்…
என் வார்த்தைகளை செவி கொடுத்து கேளுங்கள்…
குழு : லல்லல்லா…

—BGM—


Notes : Varungala Mannargale Song Lyrics in Tamil. This Song from Raja Chinna Roja (1989). Song Lyrics penned by Vairamuthu. வருங்கால மன்னர்களே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading