ஒரு பண்பாடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே. ஜே. யேசுதாஸ்சந்திரபோஸ்ராஜா சின்ன ரோஜா

Oru Panpadu Song Lyrics in Tamil


ஆண் : ஒரு பண்பாடு இல்லையென்றால்…
பாரதம் இல்லை…
நம் பண்போடு வாழ்ந்திருந்தால்…
பாவமும் இல்லை…

ஆண் : சிறகில்லாமல் தள்ளாடும் செல்ல கிளிகள்…
என் கண்ணோரம் இப்போது கண்ணீர் துளிகள்…

ஆண் : ஒரு பண்பாடு இல்லையென்றால்…
பாரதம் இல்லை…
நம் பண்போடு வாழ்ந்திருந்தால்…
பாவமும் இல்லை…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : வளர்ந்து வாராத பிறை இல்லை…
வடிந்து விடாத நுரை இல்லை…
திரும்பி வாராத பகல் இல்லை…
திருந்திவிடாத மனம் இல்லை…

ஆண் : ஒரு நாள் சுவைப்போம் என்று நினைத்தால்…
ஒரு நாள் சுவைப்போம் என்று நினைத்தால்…
உயிரை சுவைக்கும் பொய் இல்லை…
இதை இன்பம் என்பது இழுக்காகும்…
நீ குளித்தால் கங்கை அழுக்காகும்…

ஆண் : ஒரு பண்பாடு இல்லையென்றால்…
பாரதம் இல்லை…
நம் பண்போடு வாழ்ந்திருந்தால்…
பாவமும் இல்லை…

BGM

ஆண் : மயக்கம் என்பது மாத்திரையா…
மரணம் போகும் யாத்திரையா…
விளக்கு இருந்தும் இருட்டறையா…
விடிந்த பின்னும் நித்திரையா…

ஆண் : வரம்பு கடந்து நரம்பு தளர்ந்து…
வரம்பு கடந்து நரம்பு தளர்ந்து…
வயதை தொலைத்து வாழ்வதா…
இந்த உலகம் உன்னை அழைக்கிறது…
அட இன்னும் வாழ்க்கை இருக்கிறது…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஒரு பண்பாடு இல்லையென்றால்…
பாரதம் இல்லை…
நம் பண்போடு வாழ்ந்திருந்தால்…
பாவமும் இல்லை…

ஆண் : சிறகில்லாமல் தள்ளாடும் செல்ல கிளிகள்…
என் கண்ணோரம் இப்போது கண்ணீர் துளிகள்…

ஆண் : ஒரு பண்பாடு இல்லையென்றால்…
பாரதம் இல்லை…
நம் பண்போடு வாழ்ந்திருந்தால்…
பாவமும் இல்லை…


Notes : Oru Panpadu Song Lyrics in Tamil. This Song from Raja Chinna Roja (1989). Song Lyrics penned by Vairamuthu. ஒரு பண்பாடு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading