நல்ல நல்ல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்மலேசியா வாசுதேவன்தேவாமனசுக்கேத்த மகராசா

Nalla Nalla Pillaigale Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நல்ல நல்ல பிள்ளைகளே நீங்க…
நான் சொல்லப்போறேன் கத ஒண்ணு வாங்க…
நல்ல நல்ல பிள்ளைகளே நீங்க…
நான் சொல்லப்போறேன் கத ஒண்ணு வாங்க…

ஆண் : அன்பிருக்கும் நெஞ்சமே தெய்வமென்று சொல்லுங்க…
அண்ணன் தம்பி போலவே ஒன்றுபட்டு வாழுங்க…

ஆண் : நல்ல நல்ல பிள்ளைகளே நீங்க…
நான் சொல்லப்போறேன் கத ஒண்ணு வாங்க…

—BGM—

ஆண் : காசு பணம் இல்லாம கல்யாணம் ஆகாம…
கன்னி மலர் தலையிங்கு வாடுதடா…

—BGM—

ஆண் : காசு பணம் இல்லாம கல்யாணம் ஆகாம…
கன்னி மலர் தலையிங்கு வாடுதடா…
காதலுக்கு தடையிட்டு சாதியென்னும் திரையிட்டு…
வேதனைகள் தினம் தினம் கூடுதடா…

ஆண் : அந்த பாரதி மீண்டும் வரவேண்டும்…
இந்த பாவங்களைத் தீயில் இட வேண்டும்…
அந்த பாரதி மீண்டும் வரவேண்டும்…
இந்த பாவங்களைத் தீயில் இட வேண்டும்…

ஆண் : அந்த புத்தன் இயேசு காந்தியும்…
இத்தரையில் பிறந்தும்…
சத்தியத்தை மனிதன் மதிக்கலையே…

ஆண் : நல்ல நல்ல பிள்ளைகளே நீங்க…
நான் சொல்லப்போறேன் கத ஒண்ணு வாங்க…
அன்பிருக்கும் நெஞ்சமே தெய்வமென்று சொல்லுங்க…

ஆண் : நல்ல நல்ல பிள்ளைகளே நீங்க…
நான் சொல்லப்போறேன் கத ஒண்ணு வாங்க…

—BGM—

ஆண் : நீர் கொடுக்கும் மேகமும் சோறு கொடுக்கும் பூமியும்…
நமக்கென காலமும் உழைக்குதடா…

—BGM—

ஆண் : நீர் கொடுக்கும் மேகமும் சோறு கொடுக்கும் பூமியும்…
நமக்கென காலமும் உழைக்குதடா…
காலை வரும் சூரியனும் மாலை வரும் சந்திரனும்…
கடமையை மதித்தே நடக்குதடா…

ஆண் : இங்கு பொதுவினில் ஓடுது நதி பாரு…
அது போல வாழ்ந்து நீ புகழ் தேடு…
இங்கு பொதுவினில் ஓடுது நதி பாரு…
அது போல வாழ்ந்து நீ புகழ் தேடு…

ஆண் : மண்ணில் வாழுகின்ற மனிதர் யாவரும்…
உன் சொந்தமெனும் வாழ்க்கை கல்வியை படித்திடடா…

ஆண் : நல்ல நல்ல பிள்ளைகளே நீங்க…
நான் சொல்லப்போறேன் கத ஒண்ணு வாங்க…
அன்பிருக்கும் நெஞ்சமே தெய்வமென்று சொல்லுங்க…

ஆண் : நல்ல நல்ல பிள்ளைகளே நீங்க…
நான் சொல்லப்போறேன் கத ஒண்ணு வாங்க…


Notes : Nalla Nalla Pillaigale Song Lyrics in Tamil. This Song from Manasukketha Maharasa (1989). Song Lyrics penned by Kalidasan. நல்ல நல்ல பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading