ஆத்து மேட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்பி. சுசீலா & எஸ்.பி. பாலசுப்ரமணியம்தேவாமனசுக்கேத்த மகராசா

Aathu Mettu Thopukulle Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே…

—BGM—

பெண் : நான் ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே…
அட அந்தி சாயும் நேரத்திலே…
தெனம் காத்திருந்து காத்திருந்து…
மனசும் கனலாப்போச்சு ஆசை மச்சான்… ஆஆ…

ஆண் : ஆ… ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே…
அடி அந்தி சாயும் நேரத்திலே…
தெனம் காத்திருந்து காத்திருந்தேன்…
மனசும் கனலாப் போச்சு வாடிப்புள்ளே…

—BGM—

ஆண் : பன்னீர் தெளிக்கும் மேகம் அதுதான்…
பருவ பெண்ணின் கூந்தலோ…
கண்ணே உனது கைகள் இரண்டும்…
நான் ஆடும் ஊஞ்சலோ…

பெண் : கண்ணா தழுவி நீயும்தானே…
கன்னி மனசு மாத்துற…
பொன்னா எனது தேகம் ஒண்ணு…
உரசி உரசி பாக்குறே…

பெண் : இது பூவானது நேத்து…
இத வா கைகளில் போட்டு…

ஆண் : எங்கெங்கு நான் பார்த்தாலுமே…
அங்கங்கு உன் முகம்தான்…

பெண் : ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே…
அடி அந்தி சாயும் நேரத்திலே…

ஆண் : தெனம் காத்திருந்து காத்திருந்தேன்…
மனசும் கனலாப் போச்சு வாடிப்புள்ளே…

—BGM—

பெண் : சும்மா கிடந்த நெஞ்சுக்குள்ளே…
சூடு கொஞ்சம் ஏறுது…
தூங்கும் போதும் கண்ணுக்குள்ளே…
உன் முகம் தான் தோணுது…

ஆண் : மெத்தை விரிச்சு போடவான்னு…
தேதி எதுக்கு கேக்கறே… ஹஹ…
மெல்ல மெல்ல அணைக்கும் போது…
ஒதுங்கத்தானே பார்க்குறே…

ஆண் : அடி வாவா எந்தன் தேவி…
சொல்லப்போறேன் ஒரு சேதி…

பெண் : கொஞ்சம் பொறு நெஞ்சில் ஒரு…
பஞ்சணை தான் இடுவேன் நான்…

ஆண் : நான் ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே…
அட அந்தி சாயும் நேரத்திலே…

பெண் : தெனம் காத்திருந்து காத்திருந்து…
மனசும் கனலாப்போச்சு ஆசை மச்சான்… ஆஆ…

—BGM—


Notes : Aathu Mettu Thopukulle Song Lyrics in Tamil. This Song from Manasukketha Maharasa (1989). Song Lyrics penned by Kalidasan. ஆத்து மேட்டு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading