வந்தேன்டா பால்காரன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்தேவாஅண்ணாமலை

Vanthenda Paalkaran Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹோய்… வந்தேன்டா பால்காரன்…
அடடா… பசுமாட்ட பத்தி பாடப்போறேன்…
புது பாட்டு கட்டி ஆடப்போறேன்…

ஆண் : வந்தேன்டா பால்காரன்…
அடடா… பசுமாட்ட பத்தி பாடப்போறேன்…
புது பாட்டு கட்டி ஆடப்போறேன்…

ஆண் : புல்லு கொடுத்தா பாலு கொடுக்கும்…
உன்னால முடியாது தம்பி…
அட பாதி புள்ள பொறக்குதப்பா…
பசும்பால தாய் பாலா நம்பி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஹோய்… வந்தேன்டா பால்காரன்…
அடடா… பசுமாட்ட பத்தி பாடப்போறேன்…
புது பாட்டு கட்டி ஆடப்போறேன்…

BGM

ஆண் : தன் ரத்தத்தில் ஒரு பாதி…
பாலாக பிரிப்பது…
பசுவோட வேலையப்பா…

ஆண் : அது பிரித்தாலும் பாலோடு…
தண்ணீரைக் கலப்பது…
மனிதனின் மூளையப்பா…

ஆண் : தன் ரத்தத்தில் ஒரு பாதி…
பாலாக பிரிப்பது…
பசுவோட வேலையப்பா…

ஆண் : அது பிரித்தாலும் பாலோடு…
தண்ணீரைக் கலப்பது…
மனிதனின் மூளையப்பா…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : சாணம் விழுந்தா உரம் பாரு…
எருவை எரிச்சா திருநீறு…
உனக்கு என்ன வரலாறு…
உண்மை சொன்னா தகராறு…

ஆண் : நீ மாடு போல உழைக்கலியே…
நீ மனுஷனை ஏய்ச்சு பொழைக்கிறியே…

ஆண் : வந்தேன்டா பால்காரன்…
அடடா… பசுமாட்ட பத்தி பாடப்போறேன்…
புது பாட்டு கட்டி ஆடப்போறேன்…

BGM

குழு : தந்தனா தந்தனா தந்தனா னா…
தந்தனா தந்தனா தந்தனா னா…
தந்தானனா தன தந்தானனா…
தன தந்தனா தந்தனா தந்தனா னா…
தந்தனா தந்தனா தந்தனா…

ஆண் : அட மீன் செத்தா கருவாடு…
நீ செத்தா வெறும்கூடு…
கண்ணதாசன் சொன்னதுங்க…

ஆண் : பசு இருந்தாலும் பாலாகும்…
செத்தாலும் தோலாகும்…
நான் கண்டு சொன்னதுங்க…

ஆண் : அட மீன் செத்தா கருவாடு…
நீ செத்தா வெறும்கூடு…
கண்ணதாசன் சொன்னதுங்க…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : பசு இருந்தாலும் பாலாகும்…
செத்தாலும் தோலாகும்…
நான் கண்டு சொன்னதுங்க…

ஆண் : அண்ணல் காந்தி குடிச்சதெல்லாம்…
ஆயுள் வளர்க்கும் ஆட்டுப் பாலுங்க…
அண்ணாமலை நான் குடுப்பதெல்லாம்…
அன்பு வளர்க்கும் மாட்டுப் பாலுங்க…

ஆண் : அன்னை வாரி கொடுத்தது தாய் பாலு…
என்னை வாழ வைத்தது தமிழ் பாலு…

ஆண் : வந்தேன்டா பால்காரன்…
அடடா… பசுமாட்ட பத்தி பாடப்போறேன்…
புது பாட்டு கட்டி ஆடப்போறேன்…

ஆண் : புல்லு கொடுத்தா பாலு கொடுக்கும்…
உன்னால முடியாது தம்பி… ஹா…
அட பாதி புள்ள பொறக்குதப்பா…
பசும்பால தாய் பாலா நம்பி…

ஆண் : வந்தேன்டா பால்காரன்…
அடடா… பசுமாட்ட பத்தி பாடப்போறேன்…
புது பாட்டு கட்டி ஆடப்போறேன்…

BGM


Notes : Vanthenda Paalkaran Song Lyrics in Tamil. This Song from Annamalai (1992). Song Lyrics penned by Vairamuthu. வந்தேன்டா பால்காரன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading