தாஜ்மஹால் ஓவிய காதல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிவிஜய் யேசுதாஸ் & மதுமிதாயுவன் ஷங்கர் ராஜாகள்வனின் காதலி

Tajmahal Oviya Kadhal Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தாஜ்மஹால் ஓவிய காதல்…
தேவதாஸ் காவிய காதல்…
தனிரகம் இந்த காதல்தான்…
தேசம்தான் பேசும் இதையே…
இந்த உறவு இறுதி வரைக்கும்…

ஆண் : இறைவன் போல் எங்க வாழ்வும்…
இருந்திடும் ஜென்மம் ஏழேழும்…
பிரிவு இல்லையே…
உதடு எல்லாம் உனது பெயரே…

—BGM—

ஆண் : ஓ… உனை விட ஒரு முகம்…
எனக்கில்லை அறிமுகம்…

பெண் : ஓ… இவள் உந்தன் திருமதி…
இறைவனின் விதிப்படி…

ஆண் : நீ மட்டும் இல்லை என்றால்…
நிற்காது எந்தன் மூச்சு…

பெண் : நானும் தான் உன்னை போல…
இன்னும் என்ன பேச்சு…

ஆண் : கல்யாண தேதி கற்கண்டு சேதி…
காதோரம் நீ சொல் தோழி…

பெண் : ஓ… நேரம் மாலை போடும் வேளை…
கண்ணா உன் கையில்தான்…

ஆண் : தாஜ்மஹால் ஓவிய காதல்…
தேவதாஸ் காவிய காதல்…

—BGM—

ஆண் : ஓ… தலை முதல் கால் வரை…
தழுவவா ஒரு முறை…

பெண் : பறக்குமோ தீப்பொறி…
பதியுமோ நகக் குறி…

ஆண் : கீழ் மேலாய் அங்கங்க நான்…
கொஞ்சம் கொஞ்சம் கிள்ள…

பெண் : கூச்சங்கள் தாளாமல் நான்…
தூண்டில் மீனாய் துள்ள…

ஆண் : வான் மழை நேறும் வாடிடும் வேரும்…
ஒன்றாக கூடும் நேரம்…

—BGM—

ஆண் : தாஜ்மஹால் ஓவிய காதல்…
தேவதாஸ் காவிய காதல்…

பெண் : தனிரகம் இந்த காதல்தான்…

ஆண் & பெண் : தேசம்தான் பேசும் இதையே…
இந்த உறவு இறுதி வரைக்கும்…

—BGM—


Notes : Tajmahal Oviya Kadhal  Song Lyrics in Tamil. This Song from Kalvanin Kadhali (2006). Song Lyrics penned by Vaali. தாஜ்மஹால் ஓவிய காதல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading