சேலை கட்டும் பெண்ணுக்கொரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி.பாலசுப்ரமணியம் & கே.எஸ்.சித்ராஹம்சலேகாகொடி பறக்குது

Selai Kattum Pennukkoru Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ஓஹோஹோ ஓஹோஹோ…
ஓஹோ ஹோ ஓஹோஹோ…

ஆண் : ஓஹோஹோ ஓஹோஹோ…
ஓஹோ ஹோ ஓஹோஹோ…

—BGM—

பெண் : சேலை கட்டும் பெண்ணுகொரு…
வாசம் உண்டு கண்டதுண்டா…
கண்டவர்கள் சொன்னதுண்டா…

ஆண் : சேலை கட்டும் பெண்ணுகொரு…
வாசம் உண்டு கண்டுகொண்டேன்…
கண்களுக்குள் பள்ளிகொண்டேன்…

பெண் : வானத்து இந்திரரே…
வாருங்கள் வாருங்கள்…

ஆண் : பெண்ணுக்குள் என்ன இன்பம்…
கூறுங்கள் கூறுங்கள்…

பெண் : இதுபோல் இதமோ சுகமோ…
உலகத்தில் இல்லை…

ஆண் : இவளின் குணமோ மணமோ…
மலருக்குள் இல்லை…

பெண் : சேலை கட்டும் பெண்ணுகொரு…
வாசம் உண்டு கண்டதுண்டா…
கண்டவர்கள் சொன்னதுண்டா…

—BGM—

பெண் : ஓஓ… கூந்தலுக்குள்ளே ஒரு வீடு கட்டுங்கள்…
காதலுக்குள்ளே கிடையாது சட்டங்கள்…

ஆண் : ஹா ஆ… ஆயிரம் உண்டு…
என்னோடு மச்சங்கள்…
ஆயினும் என்ன…
நெஞ்சோடு அச்சங்கள்…

பெண் : ஆனந்த சங்கமத்தில்…
அச்சம் வருமா…
பூக்களை கிள்ளுவதால்…
ரத்தம் வருமா…

ஆண் : இது போல் இதமோ சுகமோ…
உலகத்தில் இல்லை…

பெண் : இவளின் குணமோ மணமோ…
மலருக்குள் இல்லை…

ஆண் : சேலை கட்டும் பெண்ணுகொரு…
வாசம் உண்டு கண்டுகொண்டேன்…
கண்களுக்குள் பள்ளிகொண்டேன்…

—BGM—

ஆண் : ஓஓ… காதல் வெண்ணிலா…
கையோடு வந்ததோ…
கண்கள் ரெண்டுமே…
கச்சேரி பண்ணுதோ…

பெண் : ஓஓ… மோகமந்திரம்…
கண்ணோடு உள்ளதோ…
மூடு மந்திரம்…
பெண்ணோடு உள்ளதோ…

ஆண் : மீனுக்குத் தூண்டில் இட்டாய்…
யானை வந்தது…
மேகத்தை தூது விட்டாய்…
வானம் வந்தது…

பெண் : இதுபோல் இதமோ சுகமோ…
உலகத்தில் இல்லை…

ஆண் : இவளின் குணமோ மணமோ…
மலருக்குள் இல்லை…

பெண் : சேலை கட்டும் பெண்ணுகொரு…
வாசம் உண்டு கண்டதுண்டா…
கண்டவர்கள் சொன்னதுண்டா…

ஆண் : சேலை கட்டும் பெண்ணுகொரு…
வாசம் உண்டு கண்டுகொண்டேன்…
கண்களுக்குள் பள்ளிகொண்டேன்…

பெண் : வானத்து இந்திரரே…
வாருங்கள் வாருங்கள்…

ஆண் : பெண்ணுக்குள் என்ன இன்பம்…
கூறுங்கள் கூறுங்கள்…

பெண் : இதுபோல் இதமோ சுகமோ…
உலகத்தில் இல்லை…

ஆண் : இவளின் குணமோ மணமோ…
மலருக்குள் இல்லை…


Notes : Selai Kattum Pennukkoru Song Lyrics in Tamil. This Song from Kodi Parakuthu (1988). Song Lyrics penned by Vairamuthu. சேலை கட்டும் பெண்ணுக்கொரு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading