பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே. எஸ். சித்ரா | தேவா | அண்ணாமலை |
Kondaiyil Thalampoo Song Lyrics in Tamil
—BGM—
குழு : பாபபப்ப பாபபப்ப பப்பபா…
பாபபப்ப பாபபப்ப பப்பபா…
பபப பப்பா பபப பப்பபா…
பபப பப்பா பபப பப்பபா…
ஆண் : கொண்டையில்…
குழு : தாழம்பூ…
ஆண் : நெஞ்சிலே…
குழு : வாழைப்பூ…
ஆண் : கூடையில் என்ன பூ…
குஷ்பூ… என் குஷ்பூ… ஆ…
ஆண் : கொண்டையில் தாழம்பூ…
நெஞ்சிலே வாழைப்பூ…
கூடையில் என்ன பூ…
குஷ்பூ… என் குஷ்பூ…
ஆண் : உன்னாட்டம் பொம்பள யாரடி…
இந்த ஊரெல்லாம் உன்பேச்சுதானடி…
அல்லி ராணி என் அருகில் வா நீ…
முல்லையே ஆடவா முத்தம் ரெண்டு போடவா…
பெண் : வீரத்தில் மன்னன் நீ…
வெற்றியில் கண்ணன் நீ…
என்றுமே ராஜா நீ…
ரஜினி… நீ ரஜினி…
பெண் : உண்மைக்கு பேர் சொல்லும் மனிதனே…
நீ ஒரு கோடி ஆண்களின் கலைஞனே…
மின்னல் போல நீ வந்து நின்றால்…
கூட்டம் கை தட்டுமே…
கோடி பூக்கள் கொட்டுமே…
ஆண் : கொண்டையில் தாழம்பூ…
நெஞ்சிலே வாழைப்பூ…
கூடையில் என்ன பூ…
குஷ்பூ… என் குஷ்பூ…
குழு : பபபபபா பபபபபா…
பபபபபா பபபபபா…
பபபபபா பபபபபா…
பபபபபா பபபபபா…
—BGM—
ஆண் : பஞ்சுமெத்த கால் முளைச்சி…
நடந்து வந்தத போல…
நீ சுத்தி வந்து இழுக்குறியே…
சும்மா கெடந்த ஆள… ஆ ஆஹா… ஹே ஹே ஆஹா…
பெண் : கன்று கண்டா கயிர் அறுக்கும்…
காரான் பசுவ போல…
நீ எதுக்க வந்தா வழுக்குதய்யா…
இழுத்து கட்டிய சேல…
ஆண் : கண்டாங்கி சேலையாக மாறவா…
உன் கண்ணாடி மேனி தொட்டு மூடவா…
பெண் : கல்யாண தாலி கட்டிபுட்டு…
கட்டில் மேலாடு ஜல்லிகட்டு…
ஆண் : ஆனி வந்தா தாலி வந்து…
கட்டுவேன் சத்தியம்…
இன்னும் என்ன பத்தியம்…
பெண் : வீரத்தில் மன்னன் நீ…
வெற்றியில் கண்ணன் நீ…
என்றுமே ராஜா நீ…
ரஜினி… நீ ரஜினி…
—BGM—
பெண் : மின்னல் போல நீ நடக்கும்…
சுறுசுறுப்ப பாத்து…
ஜன்னல் திறந்து கொண்டதய்யா…
சனிக்கிழமை நேத்து… ஆ ஆ ஆன் ஆ…
ஆண் : தாஜ்மஹால் நடந்து வந்து…
தழுவிக்கொண்டத பாத்து…
அடி தண்ணியாக வேர்த்து போச்சு…
சட்டையெல்லாம் நேத்து…
பெண் : உன் கண்ணில் காந்த சக்தி உள்ளது…
அது என் கண்ணை வந்து வந்து கிள்ளுது…
ஆண் : கண்ணுக்குள் பார்தேன் காதல் மச்சம்…
கல்யாணம் ஆனால் இன்னும் சொச்சம்…
பெண் : அந்த யோகம் வந்து சேர்ந்தா…
கண்களும் தூங்குமா…
கட்டில் என்ன தாங்குமா…
ஆண் : குஷ்பூ… குஷ்பூ… குஷ்பூ…
ஆண் : கொண்டையில் தாழம்பூ…
நெஞ்சிலே வாழைப்பூ…
கூடையில் என்ன பூ…
குஷ்பூ… என் குஷ்பூ…
ஆண் : உன்னாட்டம் பொம்பள யாரடி…
இந்த ஊரெல்லாம் உன்பேச்சு தானடி…
அல்லி ராணி என் அருகில் வா நீ…
முல்லையே ஆடவா முத்தம் ரெண்டு போடவா…
பெண் : வீரத்தில் மன்னன் நீ…
வெற்றியில் கண்ணன் நீ…
என்றுமே ராஜா நீ…
ரஜினி… நீ ரஜினி…
Notes : Kondaiyil Thalampoo Song Lyrics in Tamil. This Song from Annaamalai (1992). Song Lyrics penned by Vairamuthu. கொண்டையில் தாழம் பூ பாடல் வரிகள்.