ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்வேல்முருகன்சுந்தர் சி பாபுநாடோடிகள்

Aadunga Da Song Lyrics in Tamil


ஆண் : என்னன்னா முன்ன பின்ன இழுத்தின்டு இருக்கேல்…
நன்னா கண்ண மூடிண்டு குத்துங்கோ…

—BGM—

ஆண் : ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா…
அழகான பொண்ணப் பாத்து தேடுங்கடா…
பாடுங்கடா மச்சான் பாடுங்கடா…
பாவாடைப் பின்னாலதான் ஓடுங்கடா…

ஆண் : குத்த வச்சப் பொண்ணு எல்லாம்…
அத்தை பொண்ணுதான்…
மத்தப் பொண்ணு எல்லாம்…
இந்த மாமன் பொண்ணுதான்…

ஆண் : கைத்தட்டிக் கூப்புடுதே ரெண்டுக்கண்ணுதான்…
ஏன்டான்னுக் கேட்க கேட்க…
வேண்டான்னு சொல்ல சொல்ல…
யாருமே இல்ல இல்ல எங்களதான்…

குழு : எப்போதும் எங்கப்பாடு மங்களந்தான்…
எப்போதும் எங்கப்பாடு மங்களந்தான்…

—BGM—

குழு : கல கல கல கல கல…
கல கல கல கல கல…

ஆண் : சிங்காரி நாத்தனா…
சிங்கிள் டீ ஆத்துனா…
கோடுப்போட்ட கிளாஸ்சுல…
எனக்கு ஊத்துனா…

ஆண் : தஞ்சாவூரு கச்சேரி…
தப்பாட்ட ஒய்யாரி…
கல்யாணம் பன்னிக்கண்ணு…
காதக்கிள்ளுனா…

ஆண் : பாம்பு புடிக்க மகுடி மகுடிதான்…
பொண்ணப்புடிக்க கபடி கபடிதான்…
ஹேய்… பாம்பு புடிக்க மகுடி மகுடிதான்…
பொண்ணப்புடிக்க கபடி கபடிதான்…

ஆண் : ஆகாயம் மேலப்பாரு…
வான வேடிக்கை…
அப்பனோடப் பொண்ணு வந்தா…
கண்ணை மூடிக்க…

ஆண் : ஊரோரம் கள்ளுக்கடை…
ஓடோடிவா வா…
பங்காளி ஒன்னா சேர்ந்து பந்தாடலாம்…

குழு : சித்தப்பன் பாக்கெட்டுல சில்லறைய எடுத்து…
நாட்டாம்மை தின்ணையில சீட்டாடலாம்…

குழு : தன்னானே தன்னே நானே தன்னானே னா…

—BGM—

ஆண் : மங்கம்மா மாராப்பு…
மல்யுத்த வீராப்பு…
சிக்குன்னு சிரிச்சாலே…
சிந்தும் மத்தாப்பு…

ஆண் : ஹையோ… ஆண்டாளு இடுப்புல…
அஞ்சாரு மடிப்புல…
குத்தாட்டம் ஆடுதே…
கொத்து சாவிதான்…

ஆண் : பல்லப்புடுங்க வாயக் காட்டுடா…
பொண்ணப் புடிக்கப் பல்லக்காட்டுடா…
டேய்… பல்லப்புடுங்க வாயக் காட்டுடா…
பொண்ணப் புடிக்கப் பல்லக்காட்டுடா…

ஆண் : பாவாடைக்கட்டி வந்தா…
பச்சை குதுரை…
சேர்ந்துக்கிட்டு ஆட்டம் போட…
வாடி எதுர…

ஆண் : ஆண்கோழி எங்களோட ஆட்டத்தப் பாரு…
வான் கோழிப்போல வந்து ஜோடி சேரு…

குழு : ஜான்புள்ள ஆனாக்கூட ஆண்புள்ள நான்தான்…
ஏன் புள்ள என்னப்பாத்து ஓடிப்போற…
ஜான்புள்ள ஆனாக்கூட ஆண்புள்ள நான்தான்…
ஏன் புள்ள என்னப்பாத்து ஓடிப்போற…

ஆண் : ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா…
அழகான பொண்ணப் பாத்து தேடுங்கடா…
பாடுங்கடா மச்சான் பாடுங்கடா…
பாவாடைப் பின்னாலதான் ஓடுங்கடா…

ஆண் : குத்த வச்சப் பொண்ணு எல்லாம்…
அத்தை பொண்ணுதான்…
மத்தப் பொண்ணு எல்லாம்…
இந்த மாமன் பொண்ணுதான்…

ஆண் : கைத்தட்டிக் கூப்புடுதே ரெண்டுக்கண்ணுதான்…
ஏன்டான்னுக் கேட்க கேட்க…
வேண்டான்னு சொல்ல சொல்ல…
யாருமே இல்ல இல்ல எங்களதான்…
எப்போதும் எங்கப்பாடு மங்களந்தான்…

குழு : தன்னானே தன்னே நானே தன்னானே னா…
ஆண் : போடு…
குழு : தன்னானே தன்னே நானே தன்னானே னா…
ஆண் : ஆமா…

ஆண் : யெஹ் புள்ள… ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…
யெஹ் அப்படி போடு ஹேய் ஹேய்…

—BGM—


Notes : Aadunga Da Song Lyrics in Tamil. This Song from Naadodigal (2009). Song Lyrics penned by Kabilan. ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading