| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| சினேகன் | ஹரிப்ரியா | இளையராஜா | நினைவெல்லாம் நீயடா |
Vanna Varaikolkal Song Lyrics in Tamil
—BGM—
பெண் : வண்ண வரைகோல்கள்…
அவன் முகத்தை வரையச் சொல்வதேனோ…
தோன்றும் அவன் தோற்றம்…
என்னை அதில் இணைய அழைப்பதேனோ…
பெண் : விண்மீன் உலகில் நிலவாய்…
விழிகள் விரும்பும் கனவாய்…
மெளனம் பேசும் கவியாய்…
காதல் வந்ததே அழகாய்…
பெண் : அவனால் எனக்குள் வந்தது மாற்றம்…
சரியா இதுதான் சரியா…
எல்லாமே அழகாச்சே அவனாலே…
என்னை நான் மறந்தேனே எதனாலே…
பெண் : வண்ண வரைகோல்கள்…
அவன் முகத்தை வரையச் சொல்வதேனோ…
தோன்றும் அவன் தோற்றம்…
என்னை அதில் இணைய அழைப்பதேனோ…
—BGM—
பெண் : வானவில் எந்தன் அருகில் இரவில் வந்து…
வந்துபோவதென்ன மாயமோ…
வாசலில் வரையும் வண்ண கோலங்கள்…
மலர்கள் விரிப்பதென்ன மாயமே…
பெண் : நேற்று வரையில் அதிசயங்கள் நிகழந்ததில்லை…
இதயத் திரையில் ரகசியங்கள் எதுவுமில்லை…
சொல்ல முடியாத ஆசைகள்…
வந்து வந்து வளைத்து வளைத்து தொல்லை தருதே…
பெண் : வண்ண வரைகோல்கள்…
அவன் முகத்தை வரையச் சொல்வதேனோ…
தோன்றும் அவன் தோற்றம்…
என்னை அதில் இணைய அழைப்பதேனோ…
—BGM—
பெண் : கேட்கும் நாதங்கள் தந்த கீதங்கள்…
உயிரில் உயிராகி கலந்ததே…
யாரும் கேட்காத நினைத்து பாக்காத…
இன்ப அதிர்வலைகள் எழுந்ததே…
பெண் : கேட்க கேட்க இதயங்களை இழுத்து போடும்…
காலம் கடந்து வேருலகம் அழைத்து போகும்…
இசையில் என்னோடு கலந்தவன்…
இதயக் கதவை அவனுக்காக திறந்து வைத்தேன்…
பெண் : வண்ண வரைகோல்கள்…
அவன் முகத்தை வரையச் சொல்வதேனோ…
தோன்றும் அவன் தோற்றம்…
என்னை அதில் இணைய அழைப்பதேனோ…
பெண் : விண்மீன் உலகில் நிலவாய்…
விழிகள் விரும்பும் கனவாய்…
மெளனம் பேசும் கவியாய்…
காதல் வந்ததே அழகாய்…
பெண் : இவனால் எனக்குள் வந்தது மாற்றம்…
சரியா இதுதான் சரியா…
எல்லாமே அழகாச்சே அவனாலே…
என்னை நான் மறந்தேனே எதனாலே…
பெண் : எல்லாமே அழகாச்சே அவனாலே…
என்னை நான் மறந்தேனே எதனாலே…
Notes : Vanna Varaikolkal Song Lyrics in Tamil. This Song from Ninaivellam Neeyada (2024). Song Lyrics penned by Snegan. வண்ண வரைகோல்கள் பாடல் வரிகள்.
