அனு தினம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பிரபாகரன் அமுதன்ஜி.வி. பிரகாஷ் குமார் & ரேஷ்மா ஷியாம்கெவின் என்நேற்று இந்த நேரம்

Anu Dhinam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அனு தினம் விழித்தே கனா…
திரளுது நெஞ்சில் வினா…
ஒரு துளி பார்வை தனா…
தூண்டிடும் காதல் சனா…

ஆண் : சுற்றும் முள்ளென சுற்றி வருகிறேன்…
சற்று நிமிந்தென்னை பார்ப்பாயா…
ரெட்டை விழிகளில் பார்வையாகிட…
லஞ்சம் ஏதும் நீ கேட்பாயா…

ஆண் : விழி மூடி நானும் தூங்குவேனா…
வெட்கம் கண்டு ஏங்குறேன் நான்…
இதழ் முட்டி மோத ஆசைதானா…
என்னை சாய்திடும் பெண்ணழகே…

பெண் : இதழ் ரெண்டும் முட்டி மோத வேணாம்…
கண்ண கட்டி காதல் வேணாம்…
வீசும் காற்றும் தொட்டு போனா…
உன்னை நினைக்கிறேன் மறு நொடியே…

ஆண் : கதிர் விழியே புதிர் மொழியே…
அனு தினமும் உன் யோசனை…
சீருடையில் சிலிர் நடையில்…
என் அவள் வந்தாலே பனி போலே…

—BGM—

ஆண் : என் காதலே… என் காதலே…
என் காதலே…

—BGM—

பெண் : கடிகாரம் காட்டும் நேரம் பொய்யானதே…
உனை தேடி சுழலும் விழிகள் தாலாட்டுதே…
வழி மீது விழிகள் வைத்து பார்த்தேன் உன்னை…
உயிரே மதில் மேலே பூனையாக மாற்றினாய் என்னை…

ஆண் : கண்ணே பூவாகும் கல்லும்…
உன் பாதம்பட்டா…
ரெண்டு துண்டும் வில்லும்…
நீ ஆசபட்டா…

ஆண் : அட நான் என்ன செய்ய…
ஊர் கண்ணுபட்டா…
இதழ் மூடி வா என் காதலே…

—BGM—

ஆண் : கதிர் விழியே புதிர் மொழியே…
அனு தினமும் உன் யோசனை…
சீருடையில் சிலிர் நடையில்…
என் அவள் வந்தாலே பனி போலே…

—BGM—

ஆண் : விழி மூடி நானும் தூங்குவேனா…
வெட்கம் கண்டு ஏங்குறேன் நான்…
இதழ் முட்டி மோத ஆசைதானா…
என்னை சாய்திடும் பெண்ணழகே…

பெண் : இதழ் ரெண்டும் முட்டி மோத வேணாம்…
கண்ண கட்டி காதல் வேணாம்…
வீசும் காற்றும் தொட்டு போனா…
உன்னை நினைக்கிறேன் மறு நொடியே…

ஆண் : கதிர் விழியே புதிர் மொழியே…
அனு தினமும் உன் யோசனை…
சீருடையில் சிலிர் நடையில்…
என் அவள் வந்தாலே பனி போலே…

—BGM—


Notes : Anu Dhinam Song Lyrics in Tamil. This Song from Netru Indha Neram (2024). Song Lyrics penned by Prabhakaran Amudhan. அனு தினம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading