வண்ணச் சிந்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மனோ & எஸ். ஜானகிஇளையராஜாகோயில் காளை

Vanna Sindhu Song Lyrics in Tamil


ஆண் : வண்ணச் சிந்து வந்து விளையாடும்…
வண்டுக் கண் இரண்டும் வந்து வந்து கூடும்… ஆஆஆ… ஆஆ…

ஆண் : வண்ணச் சிந்து வந்து விளையாடும்…
சொந்தம் தேடும்…
வண்டுக் கண் இரண்டும் வந்து வந்து கூடும்…
வலை போடும்…

ஆண் : மந்தாரச் சோலையில் சிங்கார வேளையில்…
அந்தி வரை மயக்கம்… ஓ…
சொல்லிச் சொல்லி அழைக்கும்…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : வண்ணச் சிந்து வந்து விளையாடும்…
சொந்தம் தேடும்…
வண்டுக் கண் இரண்டும் வந்து வந்து கூடும்…
வலை போடும்…

பெண் : மந்தாரச் சோலையில் சிங்கார வேளையில்…
அந்தி வரை மயக்கம்… ஓ…
சொல்லிச் சொல்லி அழைக்கும்…

BGM

ஆண் : சோலை ஓரம் நீ இல்லாது…
மாலை கோர்க்கக் கூடுமா…
வேளை பார்த்து நீ வராது…
வேகம் என்ன ஆறுமா…

பெண் : மேளத்தோடு நாயனம்… ஓ…
சேர்ந்து பாட நாள் வரும்…

ஆண் : அள்ளி அணைத்திடும் அழகே அமுதே…
சொல்லிக் கொடுத்திட வா வா…

பெண் : சொல்லிக் கொடுத்திடும் பொழுதே உனக்கே…
சொர்க்கம் படைத்திட வா வா…

ஆண் : எந்தக் காலமும் ஒன்று கூடலாம்…
தனியாய் இருந்தோம்…
இசைதான் நம்மை இணைத்தது…

பெண் : வண்ணச் சிந்து வந்து விளையாடும்…
சொந்தம் தேடும்…
வண்டுக் கண் இரண்டும் வந்து வந்து கூடும்…
வலை போடும்…

ஆண் : மந்தாரச் சோலையில் சிங்கார வேளையில்…
அந்தி வரை மயக்கம்… ஓ…
பெண் : சொல்லிச் சொல்லி அழைக்கும்…

BGM

பெண் : நானும் நீயும் கூடும் போது…
தேனும் பாலும் வேண்டுமோ…
ராகம் தாளம் சேரும் போது…
மேடை போட வேண்டுமோ…

ஆண் : ஆள் இல்லாத வேளையில்… ஓ…
கூறிடாத ஜாடையில்…

பெண் : அன்புக் கதை சொல்ல அழகே அமுதே…
அந்தப்புரத்துக்கு வா வா…

ஆண் : இன்ப ரசம் உண்ண இதழே உனக்கோர்…
இன்ப சுகம் தர வா வா…

பெண் : இன்பக் கோயிலே இந்தத் தோளிலே…
இனிதாய் இருப்பேன்…
இதுதான் இனி நிரந்தரம்…

ஆண் : வண்ணச் சிந்து வந்து விளையாடும்…
சொந்தம் தேடும்…
வண்டுக் கண் இரண்டும் வந்து வந்து கூடும்…
வலை போடும்…

பெண் : மந்தாரச் சோலையில் சிங்கார வேளையில்…
அந்தி வரை மயக்கம்… ஓ…
சொல்லிச் சொல்லி அழைக்கும்…

ஆண் : வண்ணச் சிந்து வந்து விளையாடும்…
சொந்தம் தேடும்…
வண்டுக் கண் இரண்டும் வந்து வந்து கூடும்…
வலை போடும்…

பெண் : மந்தாரச் சோலையில் சிங்கார வேளையில்…
அந்தி வரை மயக்கம்… ஓ…
சொல்லிச் சொல்லி அழைக்கும்…

பெண் : வண்ணச் சிந்து வந்து விளையாடும்…
சொந்தம் தேடும்…
வண்டுக் கண் இரண்டும் வந்து வந்து கூடும்…
வலை போடும்…

ஆண் : மந்தாரச் சோலையில் சிங்கார வேளையில்…

ஆண் & பெண் : அந்தி வரை மயக்கம்… ஓ…
சொல்லிச் சொல்லி அழைக்கும்…


Notes : Vanna Sindhu Song Lyrics in Tamil. This Song from Koyil Kaalai (1993). Song Lyrics penned by Gangai Amaran. வண்ணச் சிந்து பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading