சுகம் சுகமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புரட்சிதாசன்மலேசியா வாசுதேவன் & வாணி ஜெயராம்இளையராஜாநான் போட்ட சவால்

Sugam Sugame Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சுகம் சுகமே தொடத்தொடத்தானே…
சுகம் சுகமே ஏய் தொடத்தொடத்தானே…
சொந்தம் வரும் பின்னே தொடும் முன்னே சுகம் கண்ணே…
நெஞ்சில் வெட்கமா கொஞ்ச வேண்டுமா நியாயமா…

பெண் : சுகம் சுகமே ஏய் தொடத்தொடத்தானே…
சொந்தம் வரும் பின்னே தொடும் முன்னே சுகம் கண்ணா…
இந்த பக்கம் வா இன்பம் அல்லவா அன்பே வா…
சுகம் சுகமே…

—BGM—

பெண் : துள்ளத் துள்ள காதல்…
அள்ளிக் கொள்ள ஆசை…
தூக்கம் இல்லை என்றால் அது தகுமா…

ஆண் : மோகனப் புன்னகை கண்டேன்…
முத்துச் சரம் கண்டு நின்றேன்…

பெண் : தேன் மழை போல் என…
வாலிப நாள் வருமா… ஆஆஆ…

ஆண் : சுகம் சுகமே தொடத்தொடத்தானே…
சுகம் சுகமே… ஏஏஏ…

—BGM—

ஆண் : வஞ்சித் தொடர்ந்தாளே…
வாச மலர் போலே…
பிஞ்சு மனம் என்றால் நிலை கொள்ளுமா…

பெண் : செங்கதிர் செம்மல் கண்டேன்…
சிந்தையில் ஆயிரம் கொண்டேன்…

ஆண் : பஞ்சணை பால் பழம்…
நீ தரும் நாள் வருமா… ஆஆஆ…

பெண் : சுகம் சுகமே ஏய் தொடத்தொடத்தானே…
சுகம் சுகமே… ஏஏஏ…

—BGM—

பெண் : அந்தி வெயில் மாலை…
ஆற்றங்கரை சோலை…
விந்தை என்ன என்றால் விடை வருமா…

ஆண் : பொங்கிய தாமரை கண்டேன்…
பொன்முகம் கண்டே நின்றேன்…

பெண் : அஞ்சுகக் கண்களில் ஆனந்த நீர் வருமா… ஆஆஆ…

ஆண் : சுகம் சுகமே ஏய் தொடத்தொடத்தானே…
சொந்தம் வரும் பின்னே…
தொடும் முன்னே சுகம் கண்ணே…

பெண் : இந்த பக்கம் வா இன்பம் அல்லவா அன்பே வா…
ஆண் & பெண் : சுகம் சுகமே… ஏஏஏ…


Notes : Sugam Sugame Song Lyrics in Tamil. This Song from Naan Potta Savaal (1980). Song Lyrics penned by Puratchidasan. சுகம் சுகமே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading