அடி மானா மதுரையில

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாகோயில் காளை

Adi Maana Madhuraiyile Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடி மானா மதுரையில மல்லியப் பூ வித்தபுள்ள…
வீணா வளந்தபுள்ள வேப்பந்தோப்பு தென்னம்புள்ள…
வேணா என் கிட்ட குறும்பு…
விட்டு வெலகி தானா அங்குட்டு ஒதுங்கு…

ஆண் : அடி மானா மதுரையில மல்லியப் பூ வித்தபுள்ள…
வீணா வளந்தபுள்ள வேப்பந்தோப்பு தென்னம்புள்ள…
வேணா என் கிட்ட குறும்பு…
விட்டு வெலகி தானா அங்குட்டு ஒதுங்கு…

ஆண் : ரத்தின மணியே சுத்துற கிளியே…
குப்பையில் மொளச்ச வெத்தலக் கொடியே…
அச்சாரம் வெக்காம முத்தாரம் இங்கெதுக்கு…
மானா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : அடட டட வா வா வயசுப் புள்ள…
வட்டம் இடும் சின்னப் புள்ள…
பூவா மணக்கும் புள்ள பொட்டு வச்ச பொட்டப் புள்ள…
தானா கெறங்கி நிக்குது…
உங்க நெனப்பு தேனா வந்து இனிக்குது…

BGM

பெண் : தாளாது தள்ளி நடந்திடக் கூடாது…
சிக்குடி சிக்கு…
ஆண் : ஏஹேய்…
பெண் : சின்னக்கு சிக்கு…

ஆண் : கூடாது குத்தம் கொற சொல்லக் கூடாது…
சிங்கிடி சிங்கி…
பெண் : ஆஹா…
ஆண் : ஜிணுக்கு சிங்கி…

பெண் : தானா கனியாது இது போல கனி ஏது…

ஆண் : எனக்கு அது வேணா முடியாது…
தள்ளிப் போமா படியாது…

பெண் : வெத்தல மடிச்சு மெத்தையில் கொடுத்து…
ஒண்ணோட ஒண்ணாக உன் வீட்டத் தேடி வர வா வா…

ஆண் : அடி மானா மதுரையில மல்லியப் பூ வித்தபுள்ள…
வீணா வளந்தபுள்ள வேப்பந்தோப்பு தென்னம்புள்ள…

பெண் : தானா கெறங்கி நிக்குது…
உங்க நெனப்பு தேனா வந்து இனிக்குது…

BGM

ஆண் : கூடாது வெக்கம் மறந்திடலாகாது…
சிங்கிடி சிங்கி…
பெண் : ஆஹா…
ஆண் : ஜிணுக்கு சிங்கி…

பெண் : தாங்காது தங்க தடை சொல்லலாகாது…
சிக்குடி சிக்கு…
ஆண் : ஆஹா…
பெண் : சிணுக்கு சிக்கு…

ஆண் : வேணா வெளையாட்டு அடி நீயா வழி மாத்து…

பெண் : முழிச்சிருந்து மூணாம் பிறை பாத்து…
கொஞ்சம் வாயா எடம் பாத்து…

ஆண் : உச்சியில் கிறுக்கு உச்சத்தில் இருக்கு…
உன்னோட சங்காத்தம் தப்பாகும் எப்பொழுதும்…
மானா…

பெண் : அடட டட வா வா வயசுப்புள்ள…
வட்டம் இடும் சின்னப்புள்ள…
பூவா மணக்கும் புள்ள பொட்டு வச்ச பொட்டப்புள்ள…
தானா கெறங்கி நிக்குது…
உங்க நெனப்பு தேனா வந்து இனிக்குது…

பெண் : ரத்தினக் கிளியே சுத்துது வெளியே…
முத்திரை போட வந்தது தனியே…
இப்போதும் அப்போதும் எப்போதும் அள்ளி எடு வா வா…

ஆண் : ஜினுக்கு ஜினுக்கு ஜினு…

ஆண் : மானா மதுரையில மல்லியப் பூ வித்தபுள்ள…
வீணா வளந்தபுள்ள வேப்பந்தோப்பு தென்னம்புள்ள…
வேணா என் கிட்ட குறும்பு…
விட்டு வெலகி தானா அங்குட்டு ஒதுங்கு…


Notes : Adi Maana Madhuraiyile Song Lyrics in Tamil. This Song from Koyil Kaalai (1993). Song Lyrics penned by Gangai Amaran. அடி மானா மதுரையில பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading