வல்லவா எனை வெல்லவா 

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைசுனிதி சவுகான்யுவன் ஷங்கர் ராஜாவல்லவன்

Vallava Ennai Vellava Song Lyrics in Tamil


BGM

பெண் : வல்லவா என்னை வெல்லவா…
கொஞ்சம் கொல்லவா…
நெஞ்சை அள்ளவா…

பெண் : வல்லவா என்னை வெல்லவா…
உன்னை கண்டதே வரம் அல்லவா…

பெண் : பாதி கண்கள் மூடியும்…
பார்வை உன்னை தேடுதே…
உன்னை எண்ணி எண்ணியே…
உள்ளம்தான் வாடுதே…

பெண் : சந்தோஷத்தில் தள்ளாடுறேன்…
கற்பனைகளில் திண்டாடுறேன்…
காதலை நான் கொண்டாடுறேன்…
கொண்டாடுறேன்… கொண்டாடுறேன்…

BGM

பெண் : வல்லவா என்னை வெல்லவா…
கொஞ்சம் கொல்லவா…
நெஞ்சை அள்ளவா…

பெண் : வல்லவா என்னை வெல்லவா…
உன்னை கண்டதே வரம் அல்லவா…

—BGM—

பெண் : என் நெற்றி மீது…
உன் வேர்வை சிந்தி…
ஈரத்திலே என்னை ஆழ்த்திவிடும்…

பெண் : உன் மூச்சு காற்று…
வெப்பத்தை சேர்த்து…
மூழ்கும் முன்னே என்னை மீட்டு விடும்…

பெண் : வெளித் தோற்றம் தரும் காதல் யாவும்…
சில நாளே வரும் மாயம் ஆகும்…
அடி நெஞ்சில் சென்று குடி ஏறும்…
குணம்தானே பல யுகம் வாழும்…

பெண் : நீயாய் எனை இழுப்பதை அணைப்பதை…
மனசுக்குள் மனசுக்குள் ரசிப்பேன்…
வெளியே அது பிடிக்கலை பிடிக்கலை…
என ஒரு நாடகம் நடிப்பேன்…

BGM

பெண் : வல்லவா… வல்லவா…

BGM

பெண் : ஏமாந்து போனேன்…
ஏமாந்து போனேன்…
தென்றல் என்றே உன்னை எண்ணிவிட்டேன்…

பெண் : நீ என்னை சூழ்ந்து…
ஆட்கொண்ட போது…
புயலென்று உன்னை கண்டு கொண்டேன்…

பெண் : என்னோடு நீ இருக்கும் போது…
பொருள் இல்லா பல சண்டை தோன்றும்…

BGM

பெண் : எனதறையில் உள்ள சுவர் நான்கும்…
வித விதமாய் உன் படம் தாங்கும்…

பெண் : காலம் பல கடந்தது கடந்தது…
உறவிது உறவிது கண்ணா…
யாரும் இதை பிரித்திட நினைத்திட…
உடல் மட்டும் உலவிடும் கண்ணா…

BGM

பெண் : வல்லவா என்னை வெல்லவா…
கொஞ்சம் கொல்லவா…
நெஞ்சை அள்ளவா…

பெண் : வல்லவா என்னை வெல்லவா…
உன்னை கண்டதே வரம் அல்லவா…

பெண் : பாதி கண்கள் மூடியும்…
பார்வை உன்னை தேடுதே…
உன்னை எண்ணி எண்ணியே…
உள்ளம் தான் வாடுதே… ஏஏஏ… ஏஏ…

பெண் : சந்தோஷத்தில் தள்ளாடுறேன்…
கற்பனைகளில் திண்டாடுறேன்…
காதலை நான் கொண்டாடுறேன்…
கொண்டாடுறேன் கொண்டாடுறேன்…

பெண் : வல்லவா… வெல்லவா…
கொல்லவா… அள்ளவா…

பெண் : வல்லவா என்னை வெல்லவா…
உன்னை கண்டதே வரம் அல்லவாவல்லவா…

BGM


Notes : Vallava Ennai Vellava Song Lyrics in Tamil. This Song from Vallavan (2006). Song Lyrics penned by Thamarai. வல்லவா எனை வெல்லவா பாடல் வரிகள்.


Scroll to Top