கரகாட்டம் ஆட வந்தேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசிந்து & மனோதேவாதமிழச்சி

Karakattam Aada Vanthen Song Lyrics in Tamil


—BGM—

பெண் : கரகாட்டம் ஆட வந்தேன்…
கச்சேரி பாட வந்தேன்…
சிலுக்கு தங்கச்சின்னு…
நான் சீமையெல்லாம் பேரேடுத்தேன்…

ஆண் : தங்க கலசம் கண்டு…
தலசுத்தி சொக்குறேன்டி…
உச்சி கரகம் கண்டு…
நான் உச்சி கொட்டி நிக்கிறேன்டி…

பெண் : உச்சி கொட்டி நிக்கும் மச்சான்…
உத்து உத்து பாக்காதய்யா…

ஆண் : உத்து உத்து பாக்ககூட…
உத்தரவா கேப்பாகடி…

பெண் : கரகாட்டம் ஆட வந்தேன்…
கச்சேரி பாட வந்தேன்…

—BGM—

ஆண் : கம்மங்கதிரருக்க காட்டு வழி…
போற பொண்ணே…
காட்டு புலி அடிக்கும்…
கைத்தொணையா நான் வரவா…
ஹ ஹே ஹான்…

பெண் : காட்டு புலி அடிச்சா…
கர்ப்புக்கொரு நட்டமில்லை…
வீட்டு புலி அடிச்சா…
விவகாரம் வந்திருமே…

ஆண் : ஹே… ஹான்… தண்ணி கொடம் எடுத்து…
தத்தி தத்தி போறவளே…
தண்ணி கொடத்துக்குள்ளே…
தாவி வந்து நான் விழவா…

பெண் : தண்ணி கொடம் ஒடஞ்சா…
வேற கொடம் எனக்கு இருக்கு…
கன்னி கொடம் ஒடஞ்சா…
வாங்க ஒரு கடை இருக்கா…

ஆண் : ஹேய்… தலையில் நிக்கீது கரகம்…
என்னை தழுவ சொல்லுது கெரகம்…
பெண் : அய்யே…

—BGM—

ஆண் : கைய புடிச்சிழுத்தா…
கைவலவி சத்தம் போடும்…
கண் ஜாடை காட்டுறேன்டி…
கருக்கலிலே நீயும் வாடி…
ஹொய்… ஹான்… ஏய்…

பெண் : கண் ஜாடை காட்டி காட்டி…
கர்ப்பம் வர வைப்பவரே…
எக்குதப்பு ஆகிபோகும்…
எட்டி இரு வல்லவரே…

ஆண் : ஹான்… ஹே… ஹான்…
செங்குளத்து கம்மாயிலே…
சின்னவலை விரிக்கயிலே…
கொரவை சிக்கலையே…
குமரி பொண்ணு சிக்கிருச்சு…

பெண் : கொரவையே ஒரசிப்புட்டு…
கொதிக்கவச்ச கொலம்பு வரும்…
குமரியே ஒரசிப்புட்டா…
கொதிப்பு வரும் குழப்பம் வரும்…

பெண் : கரகாட்டம் ஆட வந்தேன்…
கச்சேரி பாட வந்தேன்…
ஆ… சிலுக்கு தங்கச்சினு…
நான் சீமையெல்லாம் பேரெடுத்தேன்…

ஆண் : தங்க கலசம் கண்டு…
தல சுத்தி சொக்குறேன்டி…
உச்சி கரகம் கண்டு…
நான் உச்சி கொட்டி நிக்கிறேன்டி…

—BGM—


Notes : Karakattam Aada Vanthen Song Lyrics in Tamil. This Song from Thamizhachi (1995). Song Lyrics penned by Vairamuthu. கரகாட்டம் ஆட வந்தேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading