கூச்சம் மிகுந்த பொண்ணு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசிந்துதேவாதமிழச்சி

Koocham Migundha Ponnu Song Lyrics in Tamil


—BGM—

பெண் : கூச்சம் மிகுந்த பொண்ணு…
கொஞ்சும் தமிழ்நாட்டு பொண்ணு…
மண்ண மட்டும் பார்க்கும் பொண்ணு நானு…

பெண் : குளத்தில் குளிக்கயிலே கொக்கு என்ன பாக்கும்னு…
குத்த வச்சு குளிக்கும் பொண்ணு நானு…
தாய்வழியே நாணம் கொண்ட தமிழச்சி நானு…
அந்த சரித்திரத்தில் கண்ணகிக்கு தங்கச்சி நானு…

பெண் : கூச்சம் மிகுந்த பொண்ணு…
கொஞ்சும் தமிழ்நாட்டு பொண்ணு…
மண்ண மட்டும் பார்க்கும் பொண்ணு நானு…

—BGM—

பெண் : பாதம் மட்டும் பார்த்ததுண்டு இந்த பூமியே…
கெண்டை காலு கொலுசை கூட பார்த்ததில்லையே…
ஆத்தங்கரை கிளிகள் பேச்சு கேட்டதுண்மையே…
ஆம்பளைங்க பேசினாலும் கேட்பதில்லையே…

பெண் : தாவணி என்பதெல்லாம் இன்பமாடி கண்ணே…
மானம்தான் பெண்களுக்கு முதல் ஆடை பெண்ணே…
தங்கமாம் பெண்களுக்கு பகையாகும் கண்ணே…
மாணம்தான் பெண்களுக்கு நகையாகும் பெண்ணே…

பெண் : மானோடு மானம் வாங்கி…
மலரோடு கூச்சம் வாங்கி…
பொண்ணா பொறந்து வந்த கண்ணு நானு…

பெண் : கூச்சம் மிகுந்த பொண்ணு…
கொஞ்சும் தமிழ்நாட்டு பொண்ணு…
மண்ண மட்டும் பார்க்கும் பொண்ணு நானு…

—BGM—

பெண் : சீதைப்போல் வாழ என்னை படைத்த பிரம்மனே…
ஸ்ரீராமன் போல வேண்டும் எந்தன் புருஷனே…
மாலை வந்து சூட போகும் எந்தன் தலைவனே…
சேலை நிழல் விழுந்திடாத நல்ல மனிதனே…

பெண் : என்னை மட்டும் பார்ப்பதற்கே கண் படைக்க வேண்டும்…
என்னை மட்டும் தொடுவதற்கே கை இருக்க வேண்டும்…
என்னை தொட்ட பத்து விரல் வேறு யாரை தீண்டும்…
சத்தியத்தின் புருஷன்தானே தமிழச்சிக்கு வேண்டும்…

பெண் : மாரோடு ஊஞ்சல் கட்டி மடியோடு கூடுகட்டி…
கொடுக்கும் புருஷன் கொஞ்ச வர வேண்டும்…

பெண் : கூச்சம் மிகுந்த பொண்ணு…
கொஞ்சும் தமிழ்நாட்டு பொண்ணு…
மண்ண மட்டும் பார்க்கும் பொண்ணு நானு…

பெண் : குளத்தில் குளிக்கயிலே கொக்கு என்ன பாக்கும்னு…
குத்த வச்சு குளிக்கும் பொண்ணு நானு…
தாய்வழியே நாணம் கொண்ட தமிழச்சி நானு…
அந்த சரித்திரத்தில் கண்ணகிக்கு தங்கச்சி நானு…

பெண் : கூச்சம் மிகுந்த பொண்ணு…
கொஞ்சும் தமிழ்நாட்டு பொண்ணு…
மண்ண மட்டும் பார்க்கும் பொண்ணு நானு…


Notes : Koocham Migundha Ponnu Song Lyrics in Tamil. This Song from Thamizhachi (1995). Song Lyrics penned by Vairamuthu. கூச்சம் மிகுந்த பொண்ணு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading