வாராய் என் தோழா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிடி.எம். சௌந்தரராஜன்தேவேந்திரன்ஆண்களை நம்பாதே

Vaaraayo Thozha Vaaraayo Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வாராய் என் தோழா வாராயோ…
மணப் பந்தல் காண வாராயோ…
பதினாறும் பெற்று தலைவா நீயும்…
பெருவாழ்வு காண வாராயோ…

குழு : வாராய் என் தோழா வாராயோ…
மணப் பந்தல் காண வாராயோ…

—BGM—

ஆண் : இள மீசை கொண்ட குமரா…
எட்டு முழ வேஷ்டி சூடும் அழகா…
கலையாத கிராப்பு தலையா…
உன் கண்ணென்ன காதல் வலையா…

ஆண் : சரியான ஜோடி பிடிச்சாயோ…
லவ் பண்ண நீயும் துடிச்சாயோ…

குழு : சரியான ஜோடி பிடிச்சாயோ…
லவ் பண்ண நீயும் துடிச்சாயோ…

குழு : வாராய் என் தோழா வாராயோ…
மணப் பந்தல் காண வாராயோ…

—BGM—

ஆண் : பொதுவாக சொல்லப் போனால்…
நல்ல பெண்டாட்டிதாசன் நீயே…
பி.டி.உஷாவைப் போலே…
அவள் பின்னாடி ஓடுவாயே…

ஆண் : புடவைகள் நீயும் துவைப்பாயோ…
தினந்தோறும் சோறு சமைப்பாயோ…

குழு : புடவைகள் நீயும் துவைப்பாயோ…
தினந்தோறும் சோறு சமைப்பாயோ…

குழு : வாராய் என் தோழா வாராயோ…
மணப் பந்தல் காண வாராயோ…

—BGM—

ஆண் : அளவோடு பிள்ளை பெற்று…
நீ வளமாக வாழ வேண்டும்…
எளிதான வழிகள் உண்டு…
அது எல்லோர்க்கும் தெரியும் இன்று…

ஆண் : விளையாட்டில் இன்பம் மலராதோ…
விலைவாசி போல உயராதோ…
விளையாட்டில் இன்பம் மலராதோ…
விலைவாசி போல உயராதோ…

ஆண் : வாராய் என் தோழா வாராயோ…
மணப் பந்தல் காண வாராயோ…
பதினாறும் பெற்று தலைவா நீயும்…
பெருவாழ்வு காண வாராயோ…

குழு : வாராய் என் தோழா வாராயோ…
மணப் பந்தல் காண வாராயோ…

—BGM—


Notes : Vaaraayo Thozha Vaaraayo Song Lyrics in Tamil. This Song from Aankalai Nambathey (1987). Song Lyrics penned by Vaali. வாராய் என் தோழா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading