ராஜாதி ராஜன்தானே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்தேவேந்திரன்ஆண்களை நம்பாதே

Raajaathi Raajanthane Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ராஜாதி ராஜன்தானே நாலு பேரும்…
ராஜாங்கம் நம்ம கையில் வந்து சேரும்…

ஆண் : காசுக்கு பஞ்சமில்லை நல்ல நேரம்…
கச்சேரி வச்சிடுவோம் எந்த நேரம்…

ஆண் : ஏரிக்கரையில் வாடைப் பனியில்…
கோடி கவிதை பாடித் திரிவோம்…

ஆண் : அண்ணாச்சி… என்னாச்சி…
கும்மாளம் கொட்டமடிப்போம்…

—BGM—

ஆண் : ராஜாதி ராஜன்தானே நாலு பேரும்…
ராஜாங்கம் நம்ம கையில் வந்து சேரும்…

—BGM—

ஆண் : ஆடுவதென்ன பூந்தேரு ஆடை கட்டிக்கிட்டு…
ஓடுவதென்ன பாலாறு…

ஆண் : நில்லடியம்மா ராசாத்தி நாளும் உன்ன வைப்பேன்…
நெஞ்சுக்குள்ள காப்பாத்தி…

ஆண் : பாத்துப்புட்டா போதும் ஒரு சேல…
முன்னால…
ஆட்டுறியே கிட்டப்போயி வால…
பின்னால…

ஆண் : தாய்க்குலத்த கிண்டல் பண்ணும் ஆளு நீ கேளு…
நானும் சேர்ந்தா கெட்டுப் போகும் பாரு என் பேரு…

ஆண் : ஆசைக்கு குத்தமில்ல…
யாருமே சுத்தமில்ல…
பெண்கள பொதுவாக ரசிச்சிடனும்…

ஆண் : ராஜாதி ராஜன்தானே நாலு பேரும்…
ராஜாங்கம் நம்ம கையில் வந்து சேரும்…

—BGM—

ஆண் : ஏன்டியம்மா ரோசாப்பூ மேடை ஏறும்போது…
எங்கடி போச்சு மாராப்பு…

ஆண் : நாலும் கேட்டு போயாச்சு…
நானும் உன்னப் பார்த்து என்னென்னவோ ஆயாச்சு…

ஆண் : பட்டணமும் பட்டிக்காடா சொல்லு…
நீ சொல்லு…
ஒத்துக்காட்டி ஒத்தி போயி நில்லு…
நீ நில்லு…

ஆண் : ஆட்டத்தையும் நோட்டத்தையும் பாரு…
நீ பாரு…
ஆக மொத்தம் சின்னப் பெண்கள் யாரு…
தேனாறு…

ஆண் : ஆட்டத்தில் குத்தமில்ல ஆடைதான் பத்தவில்ல…
மொத்தத்தில் ஒரு பாதி மறச்சிடனும்…

ஆண் : ராஜாதி ராஜன்தானே நாலு பேரும்…
ராஜாங்கம் நம்ம கையில் வந்து சேரும்…

—BGM—

ஆண் : போடப்போட உல்லாசம் தண்ணி போட்டுக்கிட்டு…
பாடப் பாட சந்தோஷம்…

ஆண் : உள்ளதெல்லாம் ரெண்டாகும் போதை ஏற ஏற…
உள்ளமொரு வண்டாகும்…

ஆண் : உன்னுடைய பேரக் கொஞ்சம் சொல்லி…
நான் சொல்லி…
ஊத்திக்கிறேன் இன்னும் நூறு மில்லி…
காசள்ளி…

ஆண் : சொல்லப் போனால் வள்ளல் நீதான் அண்ணே…
என் அண்ணே…
உன்னப் போல யாருமில்ல சொன்னேன்…
நான் சொன்னேன்…

ஆண் : ஏண்டா நீ கெட்டுப் போறே…
பாதைய விட்டுப் போறே…
குடிச்சி மயங்காம திருந்திடனும்…

ஆண் : ராஜாதி ராஜன்தானே நாலு பேரும்…
ராஜாங்கம் நம்ம கையில் வந்து சேரும்…

ஆண் : ஏரிக்கரையில் வாடைப் பனியில்…
கோடி கவிதை பாடித் திரிவோம்…
அண்ணாச்சி… என்னாச்சி…
கும்மாளம் கொட்டமடிப்போம்…

—BGM—


Notes : Raajaathi Raajanthane Song Lyrics in Tamil. This Song from Aankalai Nambathey (1987). Song Lyrics penned by Vairamuthu. ராஜாதி ராஜன்தானே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading