ராச மகராசனுக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஇளையராஜாபூவரசன்

Rasa Magan Raasanukku Song Lyrics in Tamil


ஆண் : தூக்கிச் சொருகும் சேலையா…
மடிச்சு கட்டுன வேட்டியா…
பாத்துருவோம் பாத்துருவோம்…
குழு : பாத்துருவோம் பாத்துருவோம்…

பெண் : மஞ்ச பூசும் பொம்பளையா…
மீசை வச்ச ஆம்பளையா…
பாத்துருவோம் பாத்துருவோம்…
குழு : பாத்துருவோம் பாத்துருவோம்…

குழு : யாரு கட்சி முன்னால…
யாரு கட்சி பின்னால…
பாத்துருவோம் பாத்துருவோம்…

குழு : எச்சி ஊறும் தன்னால…
நீங்க எங்க பின்னால…
பாத்துருவோம் பாத்துருவோம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : ராச மகராசனுக்கு ராசி உள்ள கை இருக்கு…
கைய வச்சா பொன் விளையும்…
கண்ண வச்சா மண் விளையும்…
என்னப் பத்தி கேட்டுப் பாரு…
சீட்டெழுதி போட்டுப் பாரு…
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா…

பெண் : ராணி மகராணி இவ ராசி உள்ள கன்னி இவ…
கைய வச்சா பொன் விளையும்…
கண்ண வச்சா மண் விளையும்…
என்னப் பத்தி கேட்டுப் பாரு…
சீட்டெழுதி போட்டுப் பாரு…
கண்ணையா கண்ணையா கண்ணையா…

ஆண் : இங்கு போட்டி வைக்காதே…
பல்ல காட்டி நிக்காதே…
ஒங்க சேல கிட்டத்தான்…
வெள்ள வேட்டி சொக்காதே…
சிறு மாம்பிஞ்சே சின்ன மைனாக் குஞ்சே…
ஒன்ன நான் விடுவேனா… ஹோய்…

குழு : ராச மகராசனுக்கு ராசி உள்ள கை இருக்கு…
கைய வச்சா பொன் விளையும்…
கண்ண வச்சா மண் விளையும்…
ஜோசியன கேட்டுப் பாரு…
சீட்டெழுதி போட்டுப் பாரு…
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா…

குழு : ராணி மகராணி இவ ராசி உள்ள கன்னி இவ…
கைய வச்சா பொன் விளையும்…
கண்ண வச்சா மண் விளையும்…
ஜோசியன கேட்டுப் பாரு…
சீட்டெழுதி போட்டுப் பாரு…
கண்ணையா கண்ணையா கண்ணையா…

BGM

ஆண் : புத்தம் புது கதிரு…
பண்ணுதடி சதிரு…
எதுக்கு எதுக்கு எதுக்கு…
பெண் : ஹான்…

ஆண் : அதப் பக்குவமா தொடணும்…
பத்து வெரல் படணும்…
அதுக்கு அதுக்கு அதுக்கு…

பெண் : பூமி மக சமஞ்சா…
வெட்கம் வந்து வளஞ்சா…
ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு…

பெண் : இதில் உங்களுக்கேன் வருத்தம்…
பொம்பளைங்க நடத்தும்…
சடங்கு சடங்கு சடங்கு…

ஆண் : ஏஹே… வக்கணையா பேசாதே…
வார்த்தைகள வீசாதே…
எங்களப் போல் ஆகாதம்மா…
வேல செய்யத்தான்… ஹா…

பெண் : அந்தக் கதை ஆகாதே…
அத்து மீறி ஆடாதே…
உங்களுக்கு வேல தரோம்…
சேலை நெய்யத்தான்…

ஆண் : அட இது போல் ஏம்மா வெவகாரம்…
பொதுவா நீதான் படுகாரம்…
பூந்தேனேதான் உன் பொன்னானேன்…
எசகா பெசகா மாட்டினேன்… ஹோய்…

குழு : ராணி மகராணி இவ ராசி உள்ள கன்னி இவ…
கைய வச்சா பொன் விளையும்…
கண்ண வச்சா மண் விளையும்…
ஜோசியன கேட்டுப் பாரு…
சீட்டெழுதி போட்டுப் பாரு…
கண்ணையா கண்ணையா கண்ணையா…

BGM

பெண் : கண்ட கண்ட பயலு…
கை தொட்டா பயிறு…
கருகும் கருகும் கருகும்…
ஆண் : யப்பா…

பெண் : அட என்னப் போல எளசா…
பொண்ணு வந்து வெதச்சா…
வளரும் வளரும் வளரும்…

ஆண் : எப்பவும்தான் ரீலு…
சுத்துகிற ஆளு…
எனக்கு தெரியும் சரக்கு…
பெண் : ஹான்…

ஆண் : அடி ரொம்பவும்தான் உனக்கு…
மண்ட கனம் இருக்கு…
பிடிச்சுக் கெடக்கு கிறுக்கு…

பெண் : ஹேய்… நம்ம கிட்ட மோதாதே…
மூக்கொடஞ்சு போகாதே…
உன்னுடைய சேதி எல்லாம்…
நானும் சொல்லட்டா…

ஆண் : முள் இருக்கும் ரோசாவே…
தேன் இருக்கும் சீசாவே…
பாடும் வண்டு போலே…
வந்து நானும் கிள்ளட்டா…

பெண் : அட ஒழுங்கா இருய்யா ஒரசாம…
எதையோ நெனச்சு உருகாதே…
ஆடாதே ஆட்டம் போடாதே…
புதுசா எதுவும் வேணுமா…

ஆண் : ராச மகராசனுக்கு ராசி உள்ள கை இருக்கு…
கைய வச்சா பொன் விளையும்…
கண்ண வச்சா மண் விளையும்…
என்னப் பத்தி கேட்டுப் பாரு…
சீட்டெழுதி போட்டுப் பாரு…
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா…

பெண் : ராணி மகராணி இவ ராசி உள்ள கன்னி இவ…
கைய வச்சா பொன் விளையும்…
கண்ண வச்சா மண் விளையும்…
என்னப் பத்தி கேட்டுப் பாரு…
சீட்டெழுதி போட்டுப் பாரு…
கண்ணையா கண்ணையா கண்ணையா…

ஆண் : இங்கு போட்டி வைக்காதே…
பல்ல காட்டி நிக்காதே…

பெண் : சிறு மாம்பிஞ்சு…
சின்ன மைனா குஞ்சு…
மொறைச்சா விடுவாள…

குழு : ராச மகராசனுக்கு ராசி உள்ள கை இருக்கு…
கைய வச்சா பொன் விளையும்…
கண்ண வச்சா மண் விளையும்…
ஜோசியன கேட்டுப் பாரு…
சீட்டெழுதி போட்டுப் பாரு…
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா…

குழு : ராணி மகராணி இவ ராசி உள்ள கன்னி இவ…
கைய வச்சா பொன் விளையும்…
கண்ண வச்சா மண் விளையும்…
ஜோசியன கேட்டுப் பாரு…
சீட்டெழுதி போட்டுப் பாரு…
கண்ணையா கண்ணையா கண்ணையா…


Notes : Rasa Magan Raasanukku Song Lyrics in Tamil. This Song from Poovarasan (1996). Song Lyrics penned by Vaali. ராச மகராசனுக்கு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading