இந்த பூவுக்கொரு அரசன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஇளையராஜாபூவரசன்

Intha Poovukku Oru Song Lyrics in Tamil


BGM

பெண் : இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்…
அடி புன்னை வனக்குயிலே…
இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்…
அடி தென் பழனி மயிலே…

பெண் : நெருங்கி பேச நிறைய சேதி…
மனதில் இருக்கு மடியில் வா நீ…

பெண் : இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்…
அடி புன்னை வனக்குயிலே…
இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்…
அடி தென் பழனி மயிலே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : மெல்ல மெல்ல பூத்து வரும்…
உன் முகத்தை பார்த்து வரும்…
நெஞ்சுக்குள்ளே நட்டு வெச்ச நாத்துதான்…

பெண் : உள்ளபடி சொல்ல போனா…
உன் இரண்டு கண்ணு பட்டு…
உள்ளுக்குள்ளே பொங்குதொரு ஊத்துதான்…

ஆண் : பொங்குகிற ஓடை ஒன்னு…
பக்கத்திலே நிக்கையிலே…
நீச்சலிட ஓடி வரும் காத்துதான்…

ஆண் : சித்திரமே நீயும் ஒரு உத்தரவு தந்து விடு…
அள்ளுகிறேன் கை இரண்டில் சேர்த்துதான்…

பெண் : காதோரம் ஆசை ஆசையாய்…
கதை பேசும் காலம்தான் இது…
ஏதேதோ பேசி பேசியே…
என்னை நீங்கி கூச்சம் போனது…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஒரு வாரம் ஒரு மாதம்…
உறங்காமல் ஒரு மோகம்…
தனியாய் இருந்தால் அனலாய் எறியும்…
போதும் ஏகாந்தம்…

பெண் : இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்…
அடி புன்னை வனக்குயிலே…
இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்…
அடி தென் பழனி மயிலே…

ஆண் : நெருங்கி பேச நிறைய சேதி…
மனதில் இருக்கு மடியில் வா நீ…

பெண் : இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்…
ஆண் : அடி புன்னை வனக்குயிலே…

பெண் : இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்…
ஆண் : அடி தென் பழனி மயிலே…

BGM

ஆண் : எப்படியும் ஆவணிக்குள் செப்பு சிலை தாவணிக்குள்…
தொட்டில் கட்டி பிள்ளை போல ஆடுவேன்…
என்னுடைய எண்ணப்படி கை கொடுக்கும் அம்மனுக்கு…
சொன்னப்படி தேர் இழுத்து பாடுவேன்…

பெண் : வைகை நதி கை இணைக்க…
தென் மதுரை இங்கிருக்க…
வங்க கடல் பக்கம் அது போகுமா…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : நட்ட நடு ஜாமத்திலும் பட்ட பகல் வேளையிலும்…
நின்றிருப்பேன் உன்னுடைய தாகமா…

ஆண் : மாம் பூவே மாலை வேளையில்…
மடி சேரு தாகம் தீர்க்கிறேன்…
தாம்பூலம் மாற்றி ஆகட்டும்…
உனை நானே கையில் சேர்க்கிறேன்…

பெண் : உனை நானும் அடையாது…
பசி தாகம் கிடையாது…
இளைத்தேன் இளைத்தேன்…
இனியும் இளைத்தால் தேகம் தாங்காது…

ஆண் : இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்…
அடி புன்னை வன குயிலே…
இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்…
அடி தென் பழனி மயிலே…

பெண் : நெருங்கி பேச நிறைய சேதி…
மனதில் இருக்கு மடியில் வா நீ…

ஆண் : இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்…
பெண் : அடி புன்னை வன குயிலே…

ஆண் : இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்…
பெண் : அடி தென் பழனி மயிலே…


Notes : Intha Poovukku Oru Song Lyrics in Tamil. This Song from Poovarasan (1996). Song Lyrics penned by Vaali. இந்த பூவுக்கொரு அரசன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading