கட்டிக்கிடலாம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஇளையராஜாபூவரசன்

Kattikidalaam Song Lyrics in Tamil


—BGM—

பெண் : கட்டிக்கிடலாம் கட்டிகிடலாம்…
கட்டினதுக்கு அப்புறம்…
வச்சிக்கிடலாம் வச்சிக்கிடலாம்
முத்த இதழ் ஒத்தடம்…

ஆண் : புடவை மயக்கம் வருதே வருதே…
உடம்பு முழுக்க சுடுதே சுடுதே…
கிடந்து தவிக்கும் உயிரே உயிரே…
கடைஞ்சு எடுத்த தயிரே தயிரே…

பெண் : கட்டிக்கிடலாம் கட்டிகிடலாம்…
கட்டினதுக்கு அப்புறம்…
வச்சிக்கிடலாம் வச்சிக்கிடலாம்…
முத்த இதழ் ஒத்தடம்…

—BGM—

ஆண் : ஊதக்காத்து ராப்போது தீ போல ஆயாச்சு…
ஊரை பார்த்து ராத்தூக்கம் நேத்தோடு போயாச்சு…

பெண் : கோடு போட்டு வச்சாலும் உன் ஆசை நிக்காது…
கோலம் போட கூடாதே நீ கொஞ்சம் உக்காரு…

ஆண் : சின்ன சின்னக்கோலம் போட்டுப் பார்க்கலாமா…
புள்ளி வைக்க வேணும் தள்ளி நிக்கலாமா…

பெண் : சுத்தமான மனசு கெட்டுப் போகலாமா…
குத்தம் சொல்லி யாரும் வம்பு பேசலாமா…

ஆண் : பொல்லாத சில்வண்டு பஞ்சாங்கம் பாத்தா…
பூந்தேன வாங்கும்…

ஆண் : கட்டிக்கிடலாம் கட்டிகிடலாம்…
கட்டினதுக்கு அப்புறம்…
வச்சிக்கிடலாம் வச்சிக்கிடலாம்…
முத்த இதழ் ஒத்தடம்…

பெண் : உனக்கு பொடவை மயக்கம் வருதே வருதே…
ஒடம்பு முழுக்க சுடுதே சுடுதே…
கடந்து தவிக்கும் உயிரே உயிரே…
கடைஞ்சி எடுத்த தயிரே தயிரே…

ஆண் : கட்டிக்கிடலாம் கட்டிகிடலாம்…
கட்டினதுக்கு அப்புறம்…
வச்சிக்கிடலாம் வச்சிக்கிடலாம்…
முத்த இதழ் ஒத்தடம்…

—BGM—

ஆண் : வெண்ணிலாவில் சோறாக்கி நாம் தின்னக்கூடாதா…
தென்றல் வந்து நம்மோடு தெம்மாங்கு பாடாதா…

பெண் : வெண்ணிலாவும் என்னான்னு கீழால பாக்காதா…
சோடி ஒன்னு அங்கேன்னு ஊராருக்கு சொல்லாதா…

ஆண் : உன்னை என்னைப் போல நூறு பேரப் பாத்து…
பழகிப் போனதம்மா பால் நிலாவும் நேத்து…

பெண் : சொல்லி சொல்லி என்ன சொக்க வைக்கும் மாமா…
இன்னும் கொஞ்ச காலம் காத்திருக்கலாமா…

ஆண் : நாள் பார்த்து நாள் பார்த்து…
நாள் போகக்கூடும் நடிக்காதே மானே…

பெண் : கட்டிக்கிடலாம் கட்டிகிடலாம்…
கட்டினதுக்கு அப்புறம்…
வச்சிக்கிடலாம் வச்சிக்கிடலாம்…
முத்த இதழ் ஒத்தடம்…

ஆண் : எனக்கு பொடவை மயக்கம் வருதே வருதே…
ஒடம்பு முழுக்க சுடுதே சுடுதே…
கடந்து தவிக்கும் உயிரே உயிரே…
கடைஞ்சி எடுத்த தயிரே தயிரே…

ஆண் : கட்டிக்கிடலாம் கட்டிகிடலாம்…
பெண் : கட்டினதுக்கு அப்புறம்…
ஆண் : வச்சிக்கிடலாம் வச்சிக்கிடலாம்…
பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்ம்…


Notes : Kattikidalaam Song Lyrics in Tamil. This Song from Poovarasan (1996). Song Lyrics penned by Vaali. கட்டிக்கிடலாம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading