தாங்கலியே ஆத்தா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம்இளையராஜாமகுடம்

Thangaliye Aatha Song Lyrics in Tamil


BGM

ஆண் : தாங்கலியே ஆத்தா உன் சொல்லுதான்…
தாங்கிக்கிட்டேன் இப்போ நான் கல்லுதான்…
வீசிப்புட்டே எம் மேலே அம்புதான்…
வாங்கிக்கிட்டேன் வேறென்ன அன்புதான்…

ஆண் : சாமி மேல ஆணையாக…
என்னாச்சு என்னாச்சு சொல்லுவேன் நான்…
சொன்ன போதும் நம்பமாட்டே…
சொல்லாம உள்ளாற மெல்லுறேன் நான்…

ஆண் : தாங்கலியே ஆத்தா உன் சொல்லுதான்…
தாங்கிக்கிட்டேன் இப்போ நான் கல்லுதான்…
தாங்கலியே ஆத்தா உன் சொல்லுதான்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : ஒத்த மாட்டு வண்டி கட்டி…
ஓட்டிப் பாக்க ஆசை கொண்டேன்…
சொந்த மாட்டை விட்டு விட்டு…
வந்த மாட்டை ஏற்றுக் கொண்டேன்…

ஆண் : ஊர் விட்டு ஊர் வந்த பொட்டப் புள்ள…
ஓயாம செஞ்சாளே அன்புத் தொல்லை…
வேர் விட்டு நீர் விட்டு வச்சக் காதல்…
பூக்காம காய்க்காம வாடிப் போச்சே…

ஆண் : ஆகாத வீட்டிலே ஆனேனே மாப்பிள்ளை…
ஆகாத வீட்டிலே ஆனேனே மாப்பிள்ளை…
எல்லாமே விதிப் படி நடக்குதடா…

ஆண் : தாங்கலியே ஆத்தா உன் சொல்லுதான்…
தாங்கிக்கிட்டேன் இப்போ நான் கல்லுதான்…
வீசிப்புட்டே எம் மேலே அம்புதான்…
வாங்கிக்கிட்டேன் வேறென்ன அன்புதான்…

ஆண் : சாமி மேல ஆணையாக…
என்னாச்சு என்னாச்சு சொல்லுவேன் நான்…
சொன்ன போதும் நம்பமாட்டே…
சொல்லாம உள்ளாற மெல்லுறேன் நான்…

ஆண் : தாங்கலியே ஆத்தா உன் சொல்லுதான்…
தாங்கிக்கிட்டேன் இப்போ நான் கல்லுதான்…
தாங்கலியே ஆத்தா உன் சொல்லுதான்…

BGM

ஆண் : தங்கக் காசு செப்பானது…
வைரக் கல்லு உப்பானது…
நல்ல உள்ளம் செஞ்சதெல்லாம்…
நாலு பேர்க்கு தப்பானது…

ஆண் : முள் மேலே வாழைதான் பட்ட போதும்…
வாழை மேல் முள் வந்து தொட்ட போதும்…
எப்போதும் வாழைதான் காயமாகும்…
என்றாலும் இது என்ன நியாயமாகும்…

ஆண் : என் ஆத்தா அறியுமா என் பாவம் புரியுமா…
என் ஆத்தா அறியுமா என் பாவம் புரியுமா…
எல்லாமே விதிப்படி நடக்குதடா…

ஆண் : தாங்கலியே ஆத்தா உன் சொல்லுதான்…
தாங்கிக்கிட்டேன் இப்போ நான் கல்லுதான்…
வீசிப்புட்டே எம் மேலே அம்புதான்…
வாங்கிக்கிட்டேன் வேறென்ன அன்புதான்…

ஆண் : சாமி மேல ஆணையாக…
என்னாச்சு என்னாச்சு சொல்லுவேன் நான்…
சொன்ன போதும் நம்ப மாட்டே…
சொல்லாம உள்ளாற மெல்லுறேன் நான்…

ஆண் : தாங்கலியே ஆத்தா உன் சொல்லுதான்…
தாங்கிக்கிட்டேன் இப்போ நான் கல்லுதான்…
வீசிப்புட்டே எம் மேலே அம்புதான்…
வாங்கிக்கிட்டேன் வேறென்ன அன்புதான்…


Notes : Thangaliye Aatha Song Lyrics in Tamil. This Song from Magudam (1992). Song Lyrics penned by Vaali. தாங்கலியே ஆத்தா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading