அந்த கஞ்சி கலயத்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாமுத்துக்காளை

Antha Kanji Kalaiyatha Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அந்த கஞ்சி கலயத்த வஞ்சி சுமக்கயிலே…
இந்த நெஞ்சம் தவிப்பது கொஞ்சமல்ல மயிலே…
வெள்ளி மிஞ்சி அணிஞ்சவ கொஞ்சி நடக்கையிலே…
அந்த அன்ன நடய நான் என்ன சொல்ல மயிலே…

ஆண் : தொங்கும் மணி கட்டும் தேரா…
பொங்கும் மணிமுத்து ஆறா…
மச்சான் மனசள்ளி ஜோரா…
மின்னல் இடை வெட்டி போறா…

ஆண் : கஞ்சி கலயத்த வஞ்சி சுமக்கயிலே…
இந்த நெஞ்சம் தவிப்பது கொஞ்சமல்ல மயிலே…

—BGM—

ஆண் : புது வெள்ளம் வத்தி போகும்…
நெஞ்சில் கொண்ட பாசம் வத்தாதம்மா…
பொழுதெல்லாம் கைய போட்டு…
அன்பு கத பேசு விஸ்தாரமா…

பெண் : கதையெல்லாம் சொல்ல சொல்ல…
தக்கப்படி கூலி தந்திடணும்…
அதை நானும் அள்ளி கொடுக்க…
நேரம் காலம் கூடி வந்திடனும்…

ஆண் : உலையும் வச்சி இலையும் வச்சி…
வாயத்தான் கட்டுறியே…
வளையல் கைய வளச்சி போட…
வாய் ஜாலம் காட்டுறியே…

ஆண் : நெஞ்ச துருவி துருவி துளையப் போட்டு…
பருவ பசிய ஊட்டுறியே…

பெண் : இந்த கஞ்சி கலயத்த வஞ்சி சுமக்கயிலே… ஏ…
உந்தன் நெஞ்சம் தவிப்பத கண்டது இந்த மயிலே… ஏ…

—BGM—

குழு : மண் வீடு கட்டி விளையாடும் பருவம்…
போனது போனது போனதடி…
அது போனது போனது போனதடி…

குழு : நிஜ வீடு கட்டி குடியேறும் தருணம்…
வந்தது வந்தது வந்ததடி…
அது வந்தது வந்தது வந்ததடி…

குழு : இது சரியான ஜோடி…
விலகாது கூடி இனியும்… ஓஓ… ஓஓஓ…

ஆண் : மனசுக்குள் உன்னத்தானே…
சித்திரமா மாட்டி வச்சிருக்கேன்…

பெண் : உசுருக்குள் உன்னத்தானே…
பத்திரமா பூட்டி வச்சிருகேன்…

ஆண் : இரவெல்லாம் சேதி சொல்ல…
வெண்ணிலவ தூது விட்டுருக்கேன்…

பெண் : உந்தன் சேதியெல்லாம் அறிஞ்சி…
நானும் ரொம்ப பாடுபட்டுருக்கேன்…

ஆண் : காத்திருக்கேன் சேதி சொல்லு…
பேசாத ஆசை மனம்…

பெண் : கழுத்தில் மூணு முடிய போட்டா…
பேசாது சாதிசனம்…

ஆண் : இந்த உலகம் அறிய உறவும் புரிய…
விரகம் தணிய வேளை வரும்…

பெண் : இந்த கஞ்சி கலயத்த வஞ்சி சுமக்கயிலே… ஏ…
உந்தன் நெஞ்சம் தவிப்பத கண்டது இந்த மயிலே… ஏ…

பெண் : தொங்கும் மணி கட்டும் தேரு…
பொங்கும் மணிமுத்து ஆறு…
பதியம் போட்டாலே மாது…
இங்கே உன்னைவிட்டா யாரு…

ஆண் : கஞ்சி கலயத்த வஞ்சி சுமக்கயிலே… ஏ…
இந்த நெஞ்சம் தவிப்பது கொஞ்சமல்ல மயிலே… ஏ…


Notes : Antha Kanji Kalaiyatha Song Lyrics in Tamil. This Song from Muthu Kaalai (1995). Song Lyrics penned by Vaali. அந்த கஞ்சி கலயத்த பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading