புன்னை வனத்து குயிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாமுத்துக்காளை

Punnai Vanathu Kuyile Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : புன்னை வனத்து குயிலே நீ…
என்னை நினைத்து இசை பாடு…

பெண் : முல்லை வனத்து குளிரே நீ…
என்னை அணைத்து உறவாடு…

ஆண் : வேங்குழலின் ஓசை எழ…
பெண் : பாய் விரிக்கும் ஆசை எழ…

ஆண் : மார்மீதும் தோள்மீதும் சாய்ந்திருக்க…
பெண் : பாலாரும் தேனாரும் பாய்ந்திருக்க…

ஆண் : புன்னை வனத்து குயிலே நீ…
என்னை நினைத்து இசை பாடு…

—BGM—

ஆண் : மைப்பூசும் கண்ணொடும் பேசும் நேரம் இன்று…
அதை பொய் பேச வைக்காதே இங்கு நாணம் என்று…

பெண் : அம்மாடி ஆகாதா வேகம் நெஞ்சில் கொண்டு…
என்னை அள்ளாதே ஆவரம் பூவும் நானும் ஒன்று…

ஆண் : கண் வைத்த பின்னாலே கை வைக்கக் கூடாதா…
பெண் : கை வைத்தால் அங்கங்கே மின்சாரம் ஓடாதா…

ஆண் : என்னென்ன ஆனால் என்ன ஆவல் கொண்ட போது…
பெண் : என்றாலும் எல்லைக்குள்ளே நின்றால்தானே மாது…

ஆண் : மார்மீதும் தோள்மீதும் சாய்ந்திருக்க…
பெண் : ஒ… பாலாரும் தேனாரும் பாய்ந்திருக்க…

ஆண் : புன்னை வனத்து குயிலே நீ…
என்னை நினைத்து இசை பாடு…

பெண் : முல்லை வனத்து குளிரே நீ…
என்னை அணைத்து உறவாடு…

—BGM—

பெண் : என் மீது தூரல்கள் போட மேகம் வர…
அட அப்போது ராசாவே உந்தன் மோகம் வர…

ஆண் : முப்பாலுக்கப்பாலும் போகும் எண்ணங்களே…
ஒரு முத்தாரம் வைத்தாலும் போதும் கன்னத்திலே…

பெண் : நீ ஒன்று வைத்தாலே நான் ஒன்று வைப்பேனே…
ஆண் : நெஞ்சத்தை நெஞ்சோடு நான் வைத்து தைப்பேனே…

பெண் : மிச்சத்தை மீதம் தன்னை மாலை இட்டு பார்ப்போம்…
ஆண் : இன்பத்தை நானும் நீயும் அள்ளி அள்ளி சேர்ப்போம்…

பெண் : மார்மீதும் தோள்மீதும் சாய்ந்திருக்க…
ஆண் : ஒ… பாலாரும் தேனாரும் பாய்ந்திருக்க…

பெண் : முல்லை வனத்து குளிரே நீ…
என்னை அணைத்து உறவாடு…

ஆண் : வேங்க்குழலின் ஓசை எழ…
பெண் : பாய் விரிக்கும் ஆசை எழ…

ஆண் : மார்மீதும் தோள்மீதும் சாய்ந்திருக்க…
பெண் : பாலாரும் தேனாரும் பாய்ந்திருக்க…

ஆண் : புன்னை வனத்து குயிலே நீ…
என்னை நினைத்து இசை பாடு…

பெண் : முல்லை வனத்து குளிரே நீ…
என்னை அணைத்து உறவாடு…


Notes : Punnai Vanathu Kuyile Song Lyrics in Tamil. This Song from Muthu Kaalai (1995). Song Lyrics penned by Vaali. புன்னை வனத்து குயிலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading