எந்தன் நெஞ்சில் நீங்காத

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ் & எஸ். ஜானகிஇளையராஜாகலைஞன்

Enthan Nenjil Song Lyrics in Tamil

BGM

ஆண் : எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா…
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா…

ஆண் : எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா…
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா…

ஆண் : இசையின் ஸ்வரங்கள் தேனா…
இசைக்கும் குயில் நீதானா வா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா…
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா…

BGM

ஆண் : பனியில் நனையும் மார்கழிப் பூவே…
எனை நீ பிரிந்தால் ஏதொரு வாழ்வே…

பெண் : உனக்கென பிறந்தவள் நானா…
நிலவுக்கு துணை இந்த வானா…

ஆண் : வாழ்ந்தேனே உறவின்றி முன்னால்…
வந்தாயே உறவாகா இந்நாள்…

பெண் : எந்தன் நெஞ்சில்… ஹோ ம்ம் ம்ம்…
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா…
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா…

பெண் : இசையின் ஸ்வரங்கள் தேனா…
இசைக்கும் குயில் நீதானா வா…

ஆண் : எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா…
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா…

ஆண் : ஆஆ ஆஆ ஆஆ…
ஸகரி ம கரிஸநி ஸநிப ம பநி ஸகரி…

BGM

பெண் : சுகங்கள் மெதுவாய் நீ தர வேண்டும்…
நகங்கள் பதித்தால் காயங்கள் தோன்றும்…

ஆண் : உதடுகள் உரசிடத்தானே…
வலிகளும் குறைந்திடும் மானே…

பெண் : நான் சூடும் நூலாடை போலே…
நீ ஆடு பூமேனி மேலே…

ஆண் : எந்தன் நெஞ்சில்… ஹோ ம்ம் ம்ம்…
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா…
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா…

பெண் : இசையின் ஸ்வரங்கள் தேனா…
ஆண் : இசைக்கும் குயில் நீதானா வா…

பெண் : எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா…
ஆண் : எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா…

Notes : Enthan Nenjil Song Lyrics in Tamil. This Song from Kalaignan (1993). Song Lyrics penned by Vaali. எந்தன் நெஞ்சில் நீங்காத பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading