கொக்கரக்கோ கோழி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகமல்ஹாசன்இளையராஜாகலைஞன்

Kokkarako Kozhi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கொக்கரக்கோ கோழி கொக்கரிக்கும் தோழி…
வக்கணையா கூவி வக்கரிக்கும் தாவி…
சூடேறிப் போச்சா கச்சேரியாச்சா…
காணாமப் போச்சா ஆச்சா பாச்சா…
சிகு சாச் சாச் சாச் சாச் சா…

ஆண் : கொக்கரக்கோ கோழி கொக்கரிக்கும் தோழி…

—BGM—

ஆண் : சித்தத்தில் தித்திக்கின்ற சங்கீதம்…
இது ரத்தத்தை சுத்தம் செய்யும் எப்போதும்…
சித்தத்தில் தித்திக்கின்ற சங்கீதம்…
இது ரத்தத்தை சுத்தம் செய்யும் எப்போதும்…

ஆண் : நாட்டுப் பாடல் கொஞ்சம் பாதி…
வெளி நாட்டுப் பாடல் மிச்சம் மீதி…
கூட்டுப் பாடல் நம்ம நீதி…
கூறட்டும் இன்று எட்டு திக்கும் நம்ம சேதி…

ஆண் : வண்ணங்கள் வேறு எண்ணங்கள் ஒன்று…
ஜாதி பேதம் கீதத்தில் ஏதம்மா…

ஆண் : கொக்கரக்கோ கோழி கொக்கரிக்கும் தோழி…

—BGM—

ஆண் : ஒன்றல்ல கற்றுக் கொள்ள வித்தைகள்…
அடி ஒவ்வொன்றும் சொல்லும் எந்தன் மெத்தைகள்…
ஒன்றல்ல கற்றுக்கொள்ள வித்தைகள்…
அடி ஒவ்வொன்றும் சொல்லும் எந்தன் மெத்தைகள்…

ஆண் : கொஞ்சிப் பார்த்த மஞ்சள் மான்கள்…
இவன் கிள்ளி பார்த்த அல்லிப் பூக்கள்…
எண்ணிப் பார்க்க நேரம் ஏது…
நான் மெல்லத் தீண்ட எட்டிப் போகும் நெஞ்சம் ஏது…

ஆண் : சொல்லாமல் சொல்வேன்…
கொல்லாமல் கொல்வேன்…
பார்வை போதும் பாவைகள் என் பக்கம்…

ஆண் : கொக்கரக்கோ கோழி கொக்கரிக்கும் தோழி…
சூடேறிப் போச்சா கச்சேரியாச்சா…
காணாமப் போச்சா ஆச்சா பாச்சா…
பூம் ஷகலகா ஷகலகா பூம்…

ஆண் : கொக்கரக்கோ கோழி கொக்கரிக்கும் தோழி…
வக்கணையா கூவி வக்கரிக்கும் தாவி…

—BGM—


Notes : Kokkarako Kozhi Song Lyrics in Tamil. This Song from Kalaignan (1993). Song Lyrics penned by Vaali. கொக்கரக்கோ கோழி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading