வானமுன்னா உயரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஷங்கர் மகாதேவன் & ஸ்ரீராம்யுவன் ஷங்கர் ராஜாமன்மதன்

Vaanamunna Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஹே… வானமுன்னா உயரம் காட்டு…
பூமியின்னா பொறுமை காட்டு…
வம்புன்னு வந்தா நீ வீரம் காட்டுடா…

ஆண் : திருவிழா கூட்டத்துல பொண்ணு வந்தா ஸ்டைல் காட்டு…
பயோஸ்கோப்னா நீ பிலிம் காட்டுடா…

ஆண் : உன் சொந்த காரன் வந்தால்…
நீ அன்பு கொஞ்சம் காட்டு…
ஒரு சொட்ட தலைய பார்த்தா…
நீ சீப்பு எடுத்து காட்டு…

ஆண் : நீயும் நானும் வேற இல்ல டா… ஆ ஆ ஹா ஹா…
ரெண்டு பேரும் ஒத்த உசுருடா…
உறவுக்கு உயிர காட்டுடா… ஆ ஆ ஆஆ…
ஊருக்கே வழிய காட்டுடா… ஆ ஆ ஹா ஹோய்…

ஆண் : ஹே… வானமுன்னா உயரம் காட்டு…
பூமியின்னா பொறுமை காட்டு…
வம்புன்னு வந்தா நீ வீரம் காட்டுடா…

ஆண் : திருவிழா கூட்டத்துல பொண்ணு வந்தா…
ஸ்டைல் காட்டு பயோஸ்கோப்னா நீ பிலிம் காட்டுடா…

—BGM—

ஆண் : ஹே… வாத்தியார பார்த்தா… ம்ம்ம் ம்ம்ம்…
முட்டி போட வேணும்…
அப்படி இல்லடா மடையா…

ஆண் : வாத்தியார பார்த்தா நீ வணக்கம் போட வேணும்…
குரு தட்சணை கொடுத்திட வேணும்…

ஆண் : பெத்தவள பார்த்தா நீ காலில் விழ வேணும்…
எந்நாளும் கும்பிட வேணும்…

ஆண் : காதலனா இருக்கும் போது…
கண்ணடிச்சு பேச வேணும்…
கணவனா மாறிபுட்டா கைய கட்டி நிக்க வேணும்…

ஆண் : கடன் கொடுத்தா…
குழு : நிமிந்து நில்லு…
ஆண் : கடன் கேட்டா…
குழு : குனிஞ்சி நில்லு…

ஆண் : எதிரியினா…
குழு : குனிஞ்சு நில்லு…
ஆண் : கஷ்டமுன்னா…
குழு : கூட நில்லு…

ஆண் : வானம் எப்பவுமே ஆதார பழசுடா…
அதில் வந்து போகும் மேகம் எல்லாம் தினமும் புதுசுடா…
வா ரெண்டு காலு புயல போல ஆட்டம் போடலாம்…

குழு : ரயில் வண்டி போகும் ரூட்ல…
மாட்டு வண்டி போக முடியுமா… ஆ ஹா…
உன்னை போல யாரு வந்தாலும்…
உன்கிட்ட நெருங்க முடியுமா முடியுமா…

—BGM—

ஆண் : பூவு கீழ முள்ளு…
கண்ணு பார்த்தா அது தப்பு…
நீ முள்ளு மேல பூவ பார்க்கணும்…

ஆண் : முதுகு மட்டும் பார்த்து…
பொண்ண பார்த்தா அது தப்பு…
நீ முன்ன போய் முகத்தை பார்க்கணும் அய்யோ…

ஆண் : ஆட்ட காட்டு மாட்ட காட்டு…
அண்ணன் வந்தா ஜல்லி கட்டு…
எவன் உன்ன எதிர்த்தாலும் அப்படியே தீர்த்து கட்டு…

ஆண் : அன்புன்னா கைய கட்டு…
வம்புன்னா வூடு கட்டு…
வேட்டிய கட்டு வெளுத்து கட்டு…
வளைச்சு வளைச்சு ரவுண்டு கட்டு…

ஆண் : நெல்லிக்காய் எப்போதுமே முதல்ல கசக்கும்டா…
தண்ணி குடிச்சு நீயும் பாரு அப்புறம் இனிக்கும்டா…
நம்ம கட்ட பொம்ம கைய வச்சா எல்லாம் ஜெய்க்கும்டா…

ஆண் : ஹே… வானமுன்னா உயரம் காட்டு…
பூமியின்னா பொறுமை காட்டு…
வம்புன்னு வந்தா நீ வீரம் காட்டுடா…

ஆண் : திருவிழா கூட்டத்துல பொண்ணு வந்தா…
ஸ்டைல் காட்டு…
பயோஸ்கோப்னா நீ பிலிம் காட்டுடா…

ஆண் : உன் சொந்த காரன் வந்தால்…
நீ அன்பு கொஞ்சம் காட்டு…
ஒரு சொட்ட தலைய பார்த்தா…
நீ சீப்பு எடுத்து காட்டு…

ஆண் : ஏய் நீயும் நானும் வேற இல்ல டா… ஆஆ ஹாஹா…
ரெண்டு பேரும் ஒத்த உசுரு டா… போடு…
உறவுக்கு உயிர காட்டு டா… ஆஆ ஆஆ…
ஊருக்கே வழிய காட்டு டா… ஆஆ ஹா டாடா டேய்…

—BGM—


Notes : Vaanamunna Song Lyrics in Tamil. This Song from Manmadhan (2004). Song Lyrics penned by Na. Muthukumar. வானமுன்னா உயரம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading