வா வா என் தேவதையே 

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமது பாலகிருஷ்ணன்வித்யாசாகர்அபியும் நானும்

Vaa Vaa En Devadhai Song Lyrics in Tamil


BGM

ஆண் : வா வா என் தேவதையே…
பொன் வாய் பேசும் தாரகையே…
பொய் வாழ்வின் பூரணமே…
பெண் பூவே வா…

ஆண் : வா வா என் தேவதையே…
பொன் வாய் பேசும் தாரகையே…
பொய் வாழ்வின் பூரணமே…
பெண் பூவே வா…

ஆண் : வான் மிதக்கும் கண்களுக்கு…
மயில் இறகால் மையிடவா…
மார்புதைக்கும் கால்களுக்கு…
மணி கொலுசு நான் இடவா…

ஆண் : வா வா என் தேவதையே…
பொன் வாய் பேசும் தாரகையே…
பொய் வாழ்வின் பூரணமே…
பெண் பூவே வா…

BGM

ஆண் : செல்வ மகள் அழுகை போல்…
ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை…
பொன் மகளின் புன்னகைப்போல்…
யுக பூக்களுக்கு புன்னகைக்க தெரியவில்லை…

ஆண் : என் பிள்ளை எட்டு வைத்த நடையை போல…
எந்த இலக்கண கவிதையும் நடந்ததில்லை…
முத்துக்கள் தெறிக்கின்ற மழலை போல ஒரு…
முந்நூறு மொழிகளில் வார்த்தை இல்லை…

ஆண் : தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா…
என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே…

ஆண் : வா வா என் தேவதையே…
பொன் வாய் பேசும் தாரகையே…
பொய் வாழ்வின் பூரணமே…
பெண் பூவே வா…

BGM

ஆண் : பிள்ளை நிலா பள்ளி செல்ல…
அவள் கையோடு என் இதயம் துடிக்கக் கண்டேன்…
தெய்வ மகள் தூங்கயிலே…
சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகை கண்டேன்…

ஆண் : சிற்றாடை கட்டி அவள் சிரித்த போது…
என்னை பெற்றவள் சாயல் என்று பேசிக்கொண்டேன்…
மேல்நாட்டு ஆடை கட்டி நடந்த போது…
இவள் மீசை இல்லாத மகன் என்று சொன்னேன்…

ஆண் : பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே…
ஒரு பிரிவுக்கு ஒத்திகையை பார்த்துக் கொண்டேன்…

ஆண் : வா வா என் தேவதையே…
பொன் வாய் பேசும் தாரகையே…
பொய் வாழ்வின் பூரணமே…
பெண் பூவே வா…

ஆண் : வா வா என் தேவதையே…
பொன் வாய் பேசும் தாரகையே…
பொய் வாழ்வின் பூரணமே…
பெண் பூவே வா…

ஆண் : வான் மிதக்கும் கண்களுக்கு…
மயில் இறகால் மையிடவா…
மார்புதைக்கும் கால்களுக்கு…
மணி கொலுசு நான் இடவா…


Notes : Vaa Vaa En Devadhai Song Lyrics in Tamil. This Song from Abhiyum Naanum (2008). Song Lyrics penned by Vairamuthu. வா வா என் தேவதையே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top