சென்னை பட்டணம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்உதித் நாராயண் & ஸ்ருதி உன்னிகிருஷ்ணன்வித்யாசாகர்அள்ளி தந்த வானம்

Chennai Pattanam Song Lyrics in Tamil


BGM

ஆண் : சென்னை பட்டணம்…
எல்லாம் கட்டணம்…
கைய நீட்டினா…
காசு மழை கொட்டணும்…

பெண் : சென்னை பட்டணம்…
எல்லாம் கட்டணம்…
கைய நீட்டினா…
காசு மழை கொட்டணும்…

ஆண் : குடிக்கிற தண்ணீர் காசு…
கொசுவைவிரட்ட காசு…
அர்ச்சனை சீட்டும் காசு…
தேர்தல் சீட்டும் காசு…

ஆண் : ஆட்டோ மீட்டர் காசு…
திருட்டு வீடியோ காசு…
போலி சாமியார் காசு…
பொணத்தில் நெத்தியிலும் காசு…

ஆண் : காந்தி ஜெயந்தி மதுக்கடை திறந்து…
மறைவா வித்தா காசு…
தொட்டில் தொடங்கி சவப்பெட்டி வரையில்…
தொட்டதுக்கெல்லாம் காசு…

ஆண் : காசு அயாயோ அயாயோ…
காசு அயாயோ அயாயோ…
காசு அயாயோ அயாயோ…
காசு அயாயோ அயாயோ…

பெண் : சென்னை பட்டணம்…
எல்லாம் கட்டணம்…
கைய நீட்டினா…
காசு மழை கொட்டணும்…

BGM

ஆண் : பூமி வட்டமா காசு வட்டமா…
நாடே சுத்துதே நாகரீகம் கத்துதே…

ஆண் : கடற்கரை காதல் காசு…
கவர்மெண்ட் மாப்பிளே காசு…
நீலப்படமும் காசு…
சிவப்பு விளக்கும் காசு…

ஆண் : எல்கேஜியும் காசு…
எம்.பி.பி.எஸ். காசு…
இட்லிய வித்தாலும் காசு…
உன் கிட்னிய வித்தாலும் காசு…

ஆண் : வயசு பொண்ணு வயசானலே…
மரங்கள் கிடைக்க காசு…
கர்ப்பிணி வயித்தில் பெண் சிசு இருந்தால்…
கர்ப்பத்தை கலைக்கவும் காசு…

ஆண் : காசு…
பெண் : காசு காசு காசு காசு…
ஆண் : காசு…
பெண் : காசு காசு காசு காசு…
ஆண் : காசு…
பெண் : காசு காசு காசு காசு…
ஆண் : காசு அயாயோ அயாயோ…

பெண் : சென்னை பட்டணம்…
எல்லாம் கட்டணம்…
கைய நீட்டினா…
காசு மழை கொட்டணும்…

BGM

ஆண் : கட்சி நூறுடா…
கொள்கை இல்லடா…
கரன்சியை நீட்டுடா…
கைமேல போட்டுடா…

ஆண் : ஊர்வலம் போனா காசு…
வன்முறை செஞ்சா காசு…
சாதி சங்கம் காசு…
சந்தன மரமும் காசு…

ஆண் : கூட்டணி சேர்ந்த காசு…
தீக்குளிக்கவும் காசு…
பொறம்போக்கு நிலமும் காசு…
அட இலவசம் கூட காசு…

ஆண் : கடவுளை மனிதன் காட்டிக் கொடுக்க…
யூதாஸ் வாங்குன காசு…
காசின் மதிப்பை அறியா மனிதன்…
உலகில் செல்லா காசு…

ஆண் : காசு… அயாயோ அயாயோ…
காசு… அயாயோ அயாயோ…
காசு… அயாயோ அயாயோ…
காசு… அயாயோ அயாயோ…

ஆண் : காசு…
பெண் : காசு காசு காசு காசு…
ஆண் : காசு…
பெண் : காசு காசு காசு காசு…
ஆண் : காசு…
பெண் : காசு காசு காசு காசு…
ஆண் : காசு…
பெண் : காசு காசு காசு காசு…


Notes : Chennai Pattanam Song Lyrics in Tamil. This Song from Alli Thandha Vaanam (2001). Song Lyrics penned by Kabilan. சென்னை பட்டணம் பாடல் வரிகள்.


Scroll to Top