கண்ணாலே மியா மியா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுமதிஉன்னி மேனன் & ஸ்ரீவர்த்தினிவித்யாசாகர்அள்ளி தந்த வானம்

Kannalay Miya Miya Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கண்ணாலே மியா மியா…
கிள்ளாதே கிய்யா கிய்யா…
உள்ளே ஓர் உய்யா உய்யா…
நீ லையா மையா…

பெண் : காதலா சுட்டிப் பையா…
இழுக்குதே கண்கள் கையா…
இனிக்குமே முத்தக் கொய்யா…
இதழலின் ஓரம் தேவையா…

ஆண் : கண்ணாலே மியா மியா…
கிள்ளாதே கிய்யா கிய்யா…
உள்ளே ஓர் உய்யா உய்யா…
நீ லையா மையா…

—BGM—

பெண் : பாதிக்கண்ணால் மூடும்…
மீதிக் கண்கள் தேடும்…
மூடிக்கொண்டும் கண்கள் பார்க்கும் அல்லோ…

ஆண் : பார்வை தப்பும் நேரம்…
நாணம் கப்பல் ஏறும்…
கூந்தல் கூட கொஞ்சம் கூசும் அல்லோ…

பெண் : முதல் முதல் எழுதும்… ஹோய்…
தேர்வின் பயம்தான்…

ஆண் : உயிரினில் நுழையும்… ஹோய்…
நேரம் இதுதான்…

பெண் : ஹேய்… கொஞ்சம் சும்மாயிரு…
பக்கம் வந்தால் வம்பாயிது…

ஆண் : இமை ஒட்டி கிள்ளும்…
இதழ் திட்டி தள்ளும்…

பெண் : விரல் கட்டி கொள்ளும்…
ஒரே நிழல் மிஞ்சம்…

ஆண் : கண்ணாலே மியா மியா…
பெண் : கிள்ளாதே கிய்யா கிய்யா…

ஆண் : உள்ளே ஓர் உய்யா உய்யா…
நீ லையா மையா…

—BGM—

ஆண் : தீயை தின்னும் நேரம்…
தேகம் எங்கும் ஈரம்…
மோகம் கொண்ட முத்தம் காயாதல்லோ…

பெண் : காமன் கட்டில் ஆடும்…
மூச்சின் வெப்பம் கூடும்…
ஆடை பற்றிக் கொள்ள கூடுமல்லோ…

ஆண் : தலையணை முழுதும்… ஹோய்…
கூந்தல் அலைதான்…

பெண் : இருபது விரலும்… ஹோய்…
தீயின் இணைதான்…

ஆண் : ஹேய்… என்னை தீண்டாதிரு…
தொட்டால் என்னை தள்ளாதிரு…

பெண் : கண்கள் ரெண்டும் பள்ளம்…
வேர்வை கொட்டி வெல்லும்…

ஆண் : கட்டில் வெப்பம் செல்லும்…
ஒரே நிழல் நெஞ்சம்…

ஆண் : கண்ணாலே மியா மியா…
கிள்ளாதே கிய்யா கிய்யா…
உள்ளே ஓர் உய்யா உய்யா…
நீ லையா மையா…


Notes : Kannalay Miya Miya Song Lyrics in Tamil. This Song from Alli Thandha Vaanam (2001). Song Lyrics penned by Arivumathi. கண்ணாலே மியா மியா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading