ஐம்பது கிலோ தங்கம்டா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ராம நாராயணன்கிருஷ்ணராஜ் & கே.எஸ். சித்ராதேவாகுட்டி பிசாசு

Ambadhu Kilo Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஐம்பது கிலோ தங்கம்டா என் தங்கச்சி…
நூறு ஜென்ம பந்தம்டா என் இராசாத்தி…
சென்னையில என்னைப்போல பணக்காரன் யாரும்மில்ல…
குணத்துல கோடீஸ்வரி என் கூடப்பொறந்ததால…

ஆண் : நான் சிரிச்சா நீ சிரிப்ப…
நான் அழுதா நீ துடிப்ப…
தேனாண்டாள் தெய்வம் நீயம்மா…
நான் அண்ணன் இல்ல பிள்ளைதானம்மா…

BGM

பெண் : கருப்பு நிற தங்கம்டா என் அண்ணன்தான்…
வந்து நின்னா வண்டலூரு சிங்கம்தான்…
சென்னையில என்னப்போல பணக்காரி யாரும்மில்ல…
குணத்துல கோடீஸ்வரன் என் கூடப்பொறந்ததால…

பெண் : நான் சிரிச்சா நீ சிரிப்ப…
நான் அழுதா நீத்துடிப்ப…
மதுர வீரன் சாமி நீ அய்யா…
நீ அண்ணன் இல்ல அன்னைதானய்யா…

BGM

ஆண் : கோயிலுக்குப் போனதில்ல…
பூசையுந்தான் செஞ்சதில்ல…
என் குலசாமி இங்கிருக்க…
பிற சாமி எல்லாம் அப்புறந்தான்…

ஆண் : பாசமலர் படமிருக்கு…
நல்லத்தங்கா கதையிருக்கு…
இந்தத் தங்கை கதைக்கு முன்னால்…
அந்தக் கதையெல்லாம் கற்பனைதான்…

ஆண் : நோய் வந்து நான் படுத்தால்…
துடிதுடிப்பா பதைபதைப்பா…
தூங்காமத்தான் கண்ணுமுழிப்பா…

ஆண் : நோய் வந்து நான் படுத்தால்…
துடிதுடிப்பா பதைபதைப்பா…
தூங்காமத்தான் கண்ணுமுழிப்பா…

ஆண் : தாயப்போல ஒஸ்த்திடா என் தங்கச்சி…
இந்தத்தொப்புள் கொடி உறவுடா என் கட்சிக்கொடி… ஓ…

ஆண் : ஐம்பது கிலோ தங்கம்டா என் தங்கச்சி…
நூறு ஜென்ம பந்தம்டா என் இராசாத்தி…

BGM

பெண் : ஏடெடுத்துப் படிச்சதில்ல…
எழுத்தாணி புடிச்சதில்ல…
எங்கண்ணன்போல அறிவாளி…
எந்த வெள்ளக்கார தொரையுமில்ல…

பெண் : நம்பியாரு மீசதான்…
எம்ஜிஆரு மனசுதான்…
இவன் பாசக்காரத்தெப்பன்தான்…
வாழுமிடமோ குப்பம்தான்…

பெண் : ஜொரம் வந்து நான் கிடந்தா…
பத்தியந்தான் இவன் இருப்பான்…
பைத்தியமா தவிச்சிடுவான்…

பெண் : ஜொரம் வந்து நான் கிடந்தா…
பத்தியந்தான் இவன் இருப்பான்…
பைத்தியமா தவிச்சிடுவான்…

பெண் : ஒடம்புக்குள்ள உசுரிருக்கு சொல்வாங்க…
என் உசுருமட்டும் எதிர நிக்கிது பாருங்கோ… ஹோ…

ஆண் : ஐம்பது கிலோ தங்கம்டா என் தங்கச்சி…
நூறு ஜென்ம பந்தம்டா என் இராசாத்தி…

பெண் : சென்னையில என்னைப்போல பணக்காறி யாரும்மில்ல…
குணத்துல கோடீஸ்வரன் என் கூடப்பொறந்ததால…

ஆண் : நான் சிரிச்சா நீ சிரிப்ப…
நான் அழுதா நீ துடிப்ப…

பெண் : மதுர வீரன் சாமி நீ அய்யா…
நீ அண்ணன் இல்ல அன்னைதானய்யா…

BGM


Notes : Ambadhu Kilo Song Lyrics in Tamil. This Song from Kutti Pisasu (2010). Song Lyrics penned by Rama Narayanan. ஐம்பது கிலோ தங்கம்டா பாடல் வரிகள்.


Scroll to Top