உயிரிலே உயிரிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அருண்ராஜா காமராஜ்விஜய் யேசுதாஸ் & பிரியங்காயுவன் ஷங்கர் ராஜாபலூன்

Uyirile Uyirile Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : உயிரிலே உயிரிலே புது நதி ஊறுதே…
உறவிலே உறவிலே புது கிளை தோன்றுதே…

ஆண் : இரவெனும் ஒரு நேரம் நீ வந்ததாலே…
பால் வண்ணம் கொண்ட நாள் போல மாற…

ஆண் : ஏனோ நீ பார்த்ததாலே…
என் தேசமிங்கே பூந்தோட்டமாக…

பெண் : உன்னை தொடராமலே தொடர்வேனடா…
நகர்ந்தாலுமே நிகர் ஏதடா…
இணையாத வானும் மண்ணும் பிரியாதுதானடா…

பெண் : உறையாமலே உறைந்தேனடா…
கரையாமலே கரைந்தேனடா…
பிணையாக தானே வந்தேன் உன் கைதி நான்…

ஆண் : ஹோ… மனம் சொல்லும் வார்த்தை ஒன்று…
வாழ்க்கை இன்று ஆகுதே…

ஆண் : அன்பே உன் பாசம்தானே…
என் நெஞ்சில் இன்று ஊற்றாக ஊற…
முன்பே உன் கைகள்தானே…
என் தோளில் சேரும் பூமாலையாக…

—BGM—

பெண் : மின்மினி கனவில்…
மின்னலின் வரவில்…
மின்னிடும் வெண்ணிலவில்…
உன் மடியில் உறங்க…

பெண் : அன்பெனும் மழையில்…
கொஞ்சிடும் அழகில்…
அத்தனை இன்பங்களாய் உன்னருகில் இருக்க…

பெண் : என்னை சேரவே பிறந்தாயடா…
நிகழ்காலமாய் நீயாக திகழ்ந்தாயடா… ஹோ ஹோ…

ஆண் : ஹோ மனம் சொல்லும் வார்த்தை ஒன்று…
வாழ்க்கை இன்று ஆகுதே…

ஆண் : அன்பே உன் பாசம்தானே…
என் நெஞ்சில் இன்று ஊற்றாக ஊற…
முன்பே உன் கைகள்தானே…
என் தோளில் சேரும் பூமாலையாக…

—BGM—


Notes : Uyirile Uyirile Song Lyrics in Tamil. This Song from Balloon (2017). Song Lyrics penned by Arunraja Kamaraj. உயிரிலே உயிரிலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading