உயிரில் உயிரில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஹரிசரண்எஸ்.எஸ்.தமன்வல்லினம்

Uyiril Uyiril Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : உயிரில் உயிரில் உரசல் அதுதானோ…
நெஞ்சில் நெஞ்சில் நெரிசல் அதுதானோ…
அட விழியில் விழியில் விரிசல் அதுதானோ…

குழு : ஓயேஓ இதுதானோ…
அதுதானோ அவள்தானோ…
ஓயேஓ இதுதானோ…
அதுதானோ அவள்தானோ…

ஆண் : நம் நட்புக்குள்ளே…
தப்பு ஏதோ நடக்குதே அதுதானோ…

ஆண் : உயிரில் உயிரில் உரசல் அதுதானோ…
அட விழியில் விழியில் விரிசல் அதுதானோ…

குழு : ஓயேஓ இதுதானோ…
அதுதானோ அவள்தானோ…
ஓயேஓ இதுதானோ…
அதுதானோ அவள்தானோ…

ஆண் : வெளியேறத் தெரியாமல்…
ஒரு வார்த்தை தடுமாறும்…
உடல் எல்லாம் மின்சாரம்…
அட ஊசல் ஊசல் ஆடும்…

—BGM—

ஆண் : நம் நட்புக்குள்ளே…
தப்பு ஏதோ நடக்குதே அதுதானோ…

ஆண் : எங்கோ தெரியாமல் விழுந்தேன் விழுந்தேன்…
ஏதும் புரியாமல் தனியே நடந்தேன்…
அருகே ஒரு நேசம் புதிதாய் உணர்ந்தேன்…
அதுவோ இதுவோ மழையில் கரைந்தேன்…

ஆண் : இவள் பாகமெல்லாம் அழகு…
அதை பார்த்த நானோ மெழுகு…
என் பாதையில் ஆயிரம் பௌர்ணமி…
கூட்டி வந்தாள்…

ஆண் : ஒரு கோடி லட்சம் சிறகு…
உருவாகக் கண்டேன் எனக்கு…
ஓ ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு…
வாசமும் தந்தாள்…

ஆண் : என் அச்சம் எல்லாம் பிச்சிக் கொண்டு…
பறக்குதே அதுதானோ…

—BGM—

ஆண் : அவளின் விழி பார்த்தால்…
எனை நான் மறந்தேன்…
பகலில் ஒரு நிலவா என நான் வியந்தேன்…
தொலைவில் பார்த்தாலும் துகளாய் உடைந்தேன்…
புவியில் அட நானே புதிதாய் பிறந்தேன்…

ஆண் : ஒரு வார்த்தையாலே மனதில்…
பெரும் காற்றிலாடும் சருகில்…
என் ஆதியும் அந்தமும் நீயென தோன்றிடுதே…

ஆண் : ஒரு மௌனமான கனவு…
உன் வாசத்தாலே எழுது…
என் பேச்சிலும் மூச்சிலும்…
தாண்டவம் ஆடுது ஏனோ…

ஆண் : என் ஜன்னலுக்குள் பட்டாம்பூச்சி…
நுழைந்ததே அதுதானோ…

ஆண் : ஓயேஓ இதுதானோ…
அதுதானோ அவள்தானோ…

ஆண் : என் உயிரில் உயிரில் உரசல் அதுதானோ…
அதுதானோ அதுதானோ அதுதானோ…
அட விழியில் விழியில் விரிசல் அதுதானோ…

குழு : ஓயேஓ இதுதானோ…
அதுதானோ அவள்தானோ…
ஓயேஓ இதுதானோ…
அதுதானோ அவள்தானோ…

ஆண் : வெளியேறத் தெரியாமல்…
ஒரு வார்த்தை தடுமாறும்…
உடல் எல்லாம் மின்சாரம்…
அட ஊசல் ஊசல் ஆடும்…

ஆண் : நம் நட்புக்குள்ளே…
தப்பு ஏதோ நடக்குதே அதுதானோ…


Notes : Uyiril Uyiril Song Lyrics in Tamil. This Song from Vallinam (2014). Song Lyrics penned by Viveka. உயிரில் உயிரில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading