உயிரே உயிரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுமதிஹரிஹரன் & சுவர்ணலதாதேவாஇனியவளே

Uyire Uyire Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : உயிரே உயிரே நலம்தானா சம்மதம்தானா…
நிஜம்தானா நிம்மதிதானா…
அழகே நிலவின் முதுகில் கவிதை…
எழுதி ரசித்திடவா… ஆ…

பெண் : உயிரே உயிரே எனை நானே தந்து விட்டேனே…
தொடுவானைத் தொட்டுவிட்டேனே…
அன்பே நிலவைப் பிடித்து…
உயிரை மடித்து கொடுத்திடவா… ஆ…

ஆண் : உயிரே உயிரே…

—BGM—

ஆண் : மூச்சுவிடும் தாஜ்மஹாலை நான் பார்க்க…
விட்டு விட்டு தாமரைகள்தான் பூக்க…

பெண் : மச்சம் மட்டும் தொட்டுக் கொள்ள நீ கேட்க…
மிச்சயிடம் கோபப்பட்டுதான் பார்க்க…

ஆண் : மின்மினியே இதோ இதோதான்…
கண்களும் பேசும் காதல் விழாதான்…
சந்தனமே இதோ இதோதான்…
குங்குமம் பூசும் காதல் விழாதான்…

பெண் : என் ஜீவனே என் ஜீவனே…
உன் பார்வையின் போதையில் நான் அந்த வேளை…

ஆண் : உயிரே உயிரே குடை தேடி அலைந்தேனே…
உன்னை மூடி நனைந்தேனே…
அன்பே கனவை அழைத்துப் பரிசு…
கொடுத்து அனுப்பிடவா… ஆ…

பெண் : உயிரே உயிரே…

—BGM—

பெண் : சின்ன சின்ன கன்னக்குழி தேனூட்ட…
உள்ளுக்குள்ளே உன்னைத் தள்ளி தாழ்பூட்ட…

ஆண் : அடிக்கடி தொட்டுக்கொள்ளும் இமைப் போலே…
சத்தமின்றி சந்திக்கணும் இனிமேலே…

பெண் : வண்டினமே இங்கே இங்கேதான்…
மொட்டுகள் கூசும் நெருங்கி வராதே…
செவ்விதழே இங்கே இங்கேதான்…
முத்தங்கள் வேணும் உறங்கிவிடாதே…

ஆண் : என் ஜீவனே என் ஜீவனே…
கிறங்கிய விழிகளில் இளம்பிறை பார்த்தேன்…

பெண் : உயிரே உயிரே உனைத்தானே உணர்ந்தேனே…
உடைப்போலே அணிந்தேனே…
அன்பே நீண்ட பகலில்…
கூந்தல் இரவில் மறைத்திடவா…

ஆண் : உயிரே உயிரே…

—BGM—


Notes : Uyire Uyire Song Lyrics in Tamil. This Song from Iniyavale (1998). Song Lyrics penned by Arivumathi. உயிரே உயிரே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading