தென்றல் எந்தன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஅனுராதா ஸ்ரீராம்தேவாஇனியவளே

Thendral Song Lyrics in Tamil


BGM

பெண் : தென்றல் எந்தன் நடையை கேட்டது…
தத்தோம் தகதோம்…
தாழம்பூவின் வாசம் கேட்டேன்…
தித்தோம் திகிதோம்…

பெண் : மூன்றாம் பிறை என் நகங்கள் கேட்டது…
தத்தோம் தகதோம்…
முகிலில் ஆட ஊஞ்சல் கேட்டேன்…
தித்தோம் திகிதோம்…

பெண் : இரவுகள் என்னிடம் கண்மை கேட்டன…
தத்தோம் தகதோம்…
ரசிக்கும்படி ஒரு ரகசியம் கேட்டேன்…
தித்தோம் திகிதோம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : அழைக்காத போதும் நிலவு வந்தது…
தித்தோம் திகிதோம் திகிதோம் திகிதோம்…

BGM

குழு : தத்தோம் தகதோம் தத்தோம்…
தை தித்தோம் திகிதோம் தித்தோம்…
தத்தோம் தகதோம் தத்தோம்…
தை தித்தோம் திகிதோம் தித்தோம்…

பெண் : பகலில் வராத பால் நிலவே…
ஏன் என்னைத்தேடி வந்தாய்…
எதையோ கேட்க ஏங்கி நின்றாய்…
குழு : தத்தோம் தகதோம்…

பெண் : இரவில் வராத சூரியனே…
ஏன் என்னைத்தேடி வந்தாய்…
எதை இரவல் வாங்க நின்றாய்…
குழு : தித்தோம் திகிதோம்…

BGM

பெண் : ஆஆ… சாரல் மழை பூவாகி…
சந்தமுடன் தானாடும்…
தங்க நிற நூலாகி தாவணியை தான் சேரும்…
வா வா இன்றுதான் ஒரு மாலை நேரம் வாய்ப்பிருக்கு…
குழு : மப கமகச…

பெண் : வாசல் கோலம் வண்ணம் கேட்டது…
தத்தோம் தகதோம்…
குழு : தத்தோம் தகதோம்…

பெண் : காற்றில் கலையாதிருக்க சொன்னேன்…
தித்தோம் திகிதோம்…
குழு : தித்தோம் திகிதோம்…

BGM

குழு : தத்தோம் தகதோம் தத்தோம்…

BGM

பெண் : மண்ணைத் தொடாத மழைத்துளியே…
நான் உன்னை ஏந்தி நின்றேன்…
முத்து மாலையாக்கிக் கொண்டேன்…
குழு : தத்தோம் தகதோம்…

பெண் : வண்ணம் கெடாத மேகங்களே…
ஏன் வானில் காய வேண்டும்…
எந்தன் சேலை ஆக வேண்டும்…
குழு : தித்தோம் திகிதோம்…

BGM

பெண் : ஆஆ… துள்ளி வரும் ஆற்றோடு…
தோணிகளில் நான் ஆட…
தள்ளிவிடும் காற்றோடு தோப்புகளில் நான் ஓட…
ஆஹா… அன்புதான் நம் பாதை எங்கும் பூத்திருக்கு…
குழு : மப கமகச…

பெண் : குயில்கள் எந்தன் தமிழை கேட்டன…
தத்தோம் தகதோம்…
உலகம் கேட்க கூவச்சொன்னேன்…
தித்தோம் திகிதோம்…

பெண் : மயில்கள் எந்தன் சாயல் கேட்டன…
தத்தோம் தகதோம்…
குழு : தத்தோம் தகதோம்…

பெண் : மழையில் விரிக்க தோகை கேட்டேன்…
தித்தோம் திகிதோம்…
குழு : தித்தோம் திகிதோம்…

பெண் : மாலை நேரம் மெல்ல மாறிப்போனது…
தத்தோம் தகதோம்…
மயக்க போர்வையில் சாய்ந்து கொண்டது…
தித்தோம் திகிதோம்…

பெண் : துணையாக தூங்க இரவும் வந்தது…
தித்தோம் திகிதோம் திகிதோம் திகிதோம்…

BGM


Notes : Thendral Song Lyrics in Tamil. This Song from Iniyavale (1998). Song Lyrics penned by Thamarai. தென்றல் எந்தன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading