நிலவே நிலவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையகம்பன்ஹரிஹரன்தேவாதை பொறந்தாச்சு

Nilave Nilave Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நிலவே நிலவே தாளம் போடு…
பாட்டொண்ணு பாட போறேன்…
மலரே மலரே ராகம் தேடி…
பாட்டொண்ணு பாட போறேன்…

ஆண் : நட்சத்திரமே கூட வா கூட வா…
அக்கா மகள பாட வா பாட வா…
நான் பாடும் ராகம் அவள் அல்லவா… ஆஆ…

ஆண் : நிலவே நிலவே தாளம் போடு…
பாட்டொண்ணு பாட போறேன்…
மலரே மலரே ராகம் தேடி…
பாட்டொண்ணு பாட போறேன்…

—BGM—

ஆண் : கோலாரு தங்கம் இல்லாம…
அவ மேனி ஜொலிக்குமடி…
கோஹினூர் வைரம் இல்லாம…
அவ மூக்கு ஜொலிக்குமடி…

ஆண் : கோலாரு தங்கம் இல்லாம…
அவ மேனி ஜொலிக்குமடி…
கோஹினூர் வைரம் இல்லாம…
அவ மூக்கு ஜொலிக்குமடி…

ஆண் : என் வீட்டு தோட்டத்திலே…
மல்லிகைப்பூ செடி ஒண்ணு வச்சிருக்கேன்…
என்னோட ஆசையைத்தான்…
பூத்திருக்கும் பூக்களில் கொட்டி வச்சேன்…

ஆண் : ஆனியில நல்ல நாள் குறிச்சி…
ஆவணியில் ஒரு பாக்கு வச்சி…
என் அக்கா மக அவளத்தான் கை புடிக்கப்போறேன்…

ஆண் : நிலவே நிலவே தாளம் போடு…
பாட்டொண்ணு பாட போறேன்…
மலரே மலரே ராகம் தேடி…
பாட்டொண்ணு பாட போறேன்…

—BGM—

ஆண் : ஆகாயம் ரெண்டு பட்டாலும்…
அவ மூச்சில் கலந்திருப்பேன்…
அவ மேலே மழை விழுந்தாலும்…
அடிபட்டு நான் துடிப்பேன்…

ஆண் : ஆகாயம் ரெண்டு பட்டாலும்…
அவ மூச்சில் கலந்திருப்பேன்…
அவ மேலே மழை விழுந்தாலும்…
அடிபட்டு நான் துடிப்பேன்…

ஆண் : வாழ்விருக்கும் காலம் எல்லாம்…
அவளுக்கு நிழலா நான் இருப்பேன்…
அவள் நடக்கும் பாதையெல்லாம்…
அனுதினம் பூவால் நான் துடைப்பேன்…

ஆண் : கண்ணுக்குள்ளே கோயில் கட்டி வைப்பேன்…
கண்மணிய அதில் விட்டு வைப்பேன்…
அவ கால் கொலுசா நான் இருக்க…
ஜென்மம் ஏழு எடுப்பேன்…

ஆண் : நிலவே நிலவே தாளம் போடு…
பாட்டொண்ணு பாட போறேன்…
மலரே மலரே ராகம் தேடி…
பாட்டொண்ணு பாட போறேன்…

ஆண் : நட்சத்திரமே கூட வா கூட வா…
அக்கா மகள பாட வா பாட வா…
நான் பாடும் ராகம் அவள் அல்லவா… ஆஆ…

—BGM—


Notes : Nilave Nilave Song Lyrics in Tamil. This Song from Thai Poranthachu (2000). Song Lyrics penned by Ilaya Kamban. நிலவே நிலவே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading