உயிரே உயிரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & சுஜாதா மோகன்தேவாஉயிரிலே கலந்தது

Uyire Uyire Azhaithathenna Song Lyrics in Tamil


பெண் : உயிரே உயிரே அழைத்ததென்ன…
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன…

—BGM—

பெண் : உயிரே உயிரே அழைத்ததென்ன…
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன…
உயிரே உயிரே அழைத்ததென்ன…
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன…

பெண் : உன் கீதம் எந்தன் காதில் விழுமா…
உன் வானம் எந்தன் பக்கம் வருமா…
கங்கை எந்தன் வாசல் வருமா…
இல்லை கானல் நீரில் ஓடம் செல்லுமா…

பெண் : உயிரே உயிரே அழைத்ததென்ன…
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன…

—BGM—

ஆண் : நீ தோன்றினாய் அடிவானமாய்…
நான் வந்ததும் தொலைவாகினாய்…

—BGM—

பெண் : கண் மூடினேன் மெய் தீண்டினாய்…
கை நீட்டினேன் கனவாகினாய்…

ஆண் : மழை சாலையில் குமிழாகினாய்…
விரல் தீண்டினேன் உடைந்தோடினாய்…

பெண் : என் தூரத்து விண்மீனே…
கை ஓரத்தில் வருவாயா…
என்னை ஒரு முறை தொடுவாயா…
ஒளியே… யே யே யே…

ஆண் : உயிரே உயிரே அழைத்ததென்ன…
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன…

—BGM—

பெண் : காற்றெங்கிலும் உன் கீர்த்தனை…
கண்ணீரிலே ஆராதனை…

—BGM—

ஆண் : என் தோட்டத்தில் உன் வாசனை…
என் ஜீவனில் உன் வேதனை…

பெண் : நான் தேடினேன் என் கண்ணனை…
புயல் சூழ்ந்ததே என் கண்களை…

ஆண் : நான் வேறெங்கும் மறையவில்லை…
என் வேர் என்றும் அழிவதில்லை…
உன் வானம் முடிவதில்லை உறவே… ஹேஹேஹே…

பெண் : உயிரே உயிரே அழைத்ததென்ன…
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன…
உயிரே உயிரே அழைத்ததென்ன…
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன…

ஆண் : உன் கீதம் எந்தன் காதில் விழுமா…
உன் வானம் எந்தன் பக்கம் வருமா…
கங்கை எந்தன் வாசல் வருமா…
இல்லை கானல் நீரில் ஓடம் செல்லுமா…

—BGM—


Notes : Uyire Uyire Azhaithathenna Song Lyrics in Tamil. This Song from Uyirile Kalanthathu (2000). Song Lyrics penned by Vairamuthu. உயிரே உயிரே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading