| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வைரமுத்து | ஹரிஹரன் & ஹரிணி | தேவா | உயிரிலே கலந்தது |
Deva Deva Devathaiye Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஹே தேவ தேவ தேவ தேவ தேவதையே…
காதல் தேவை தேவை தேவை தேவை வா மதியே…
—BGM—
ஆண் : என் காதலி யார் என்று…
நான் காற்றில் அலைந்தேனே…
ஒரு தேவதை உன் பெயரை…
வந்து தெரிவித்து போனாலே…
ஆண் : நீ போடும் தாவணியே…
என் கட்சி கொடி…
நான் உன்னை ஆட்சிசெய்வேன்…
உன் இஷ்டப்படி…
ஆண் : ஹே தேவ தேவ தேவ தேவ தேவதையே…
காதல் தேவை தேவை தேவை தேவை வா மதியே…
—BGM—
ஆண் : ஒரு ஆப்பிள் அறுந்து விழுந்தால்…
அது மண்ணைதானே சேரும்…
ஆண் ஆசை மலர்ந்து கொண்டால்…
அது பெண்ணைதானே சேரும்…
—BGM—
பெண் : ஒரு வார்த்தை பருவமானால்…
அது கவிதை ஆக மாறும்…
பெண் கனவு பருவமானால்…
அது காதலாக மாறும்…
ஆண் : பூக்கள் யாசித்தால்…
வண்டுகள் வந்து தேன் எடுக்கும்…
கண்கள் யோசித்தால்…
காதல் நெஞ்சில் ஊட்றெடுக்கும்…
பெண் : மாலை வந்தால் குளிருது…
என்னை மார்பில் புதைத்து விடு…
புலம்பும் வளையல் உடைத்துவிடு…
ஆண் : ஹே தேவ தேவ தேவ தேவ தேவதையே…
காதல் தேவை தேவை தேவை வா மதியே…
—BGM—
பெண் : நம் காதல் ஏட்டில் எழுது…
முதல் முத்த அத்தியாயம்…
இன்று விடியும் முன்பு எழுது…
நீ மொத்த அத்தியாயம்…
—BGM—
ஆண் : இன்று எந்தன் மார்பு…
நிறம் சிவந்ததென்ன மாயம்…
உன் புனிதமான விரலால்…
இது பூக்கள் செய்த காயம்…
பெண் : காதல் யுத்தத்தில்…
அங்கும் இங்கும் சேதம் வரும்…
சேதம் வந்தால்தான்…
சீக்கிரம் இங்கே நியாயம் வரும்…
ஆண் : உயிரில் வந்து கலந்தவள் நீதான்…
உயிருக்குள் பிரிவேது…
நமது உறவுகள் உடையாது…
ஆண் : ஹே தேவ தேவ தேவ தேவ தேவதையே…
காதல் தேவை தேவை தேவை வா மதியே…
பெண் : என் காதலன் யார் என்று…
நான் காற்றில் அலைந்தேனே…
ஒரு தேவதை உன் பெயரை வந்து…
தெரிவித்து போனாலே…
பெண் : நான் போடும் தாவணியே…
உன் கட்சி கொடி…
நான் உன்னை சுவாசிப்பேன்…
என் இஷ்டப்படி…
ஆண் : ஹே தேவ தேவ தேவ தேவ தேவதையே…
காதல் தேவை தேவை தேவை வா மதியே…
ஹே தேவ தேவ தேவ தேவ தேவதையே…
காதல் தேவை தேவை தேவை வா மதியே…
Notes : Deva Deva Devathaiye Song Lyrics in Tamil. This Song from Uyirile Kalanthathu (2000). Song Lyrics penned by Vairamuthu. தேவ தேவ தேவதையே பாடல் வரிகள்.

