உரிமையை மீட்போம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுவிஜய் பிரகாஷ் & அனந்துசந்தோஷ் நாராயணன்காலா

Urimayai Meetpom Song Lyrics in Tamil


ஆண் : உரிமையை மீட்போம்… ஓஓஓ ஓஓஓ ஓஓ ம்ம்…
உரிமையை மீட்போம்…
உரிமையை மீட்போம்…
உரிமையை மீட்போம்…
உரிமையை மீட்போம்… ஓஓஓ ஓஓஓ ஓஓ ம்ம்…

—BGM—

ஆண் : யார் வச்சது யார் வச்சது உன் சட்டமடா…
இங்க வாழ்வென்பதும் சாவென்பதும் நிலம் மட்டுமடா…

குழு : யார் வச்சது யார் வச்சது உன் சட்டமடா…
இங்க வாழ்வென்பதும் சாவென்பதும் நிலம் மட்டுமடா…

—BGM—

ஆண் : ஹே யே… எவனோ வந்து வெதைச்சான்…
அத எவனோ வந்து அறுத்தான்…
ரொம்ப கருத்தா அத வளத்த…
இவன் பசியா துடிச்சான்…

ஆண் : மொறையா தல மொறையா…
வழி வழியா இன மொழியா…
அட பிரிந்தே கிடந்தவனும்…
இப்ப நிமிர்ந்தான் நிமிர்ந்தான்…

குழு : நிலமே எங்க உரிமை…
நிலமே எங்க உரிமை… உரிமை உரிமை…
நிலமே எங்க உரிமை…
நிலமே எங்க உரிமை… உரிமை உரிமை…

—BGM—

ஆண் : ஹே யே… இடியா ஒரு புயலா வந்து இறங்கும்…
நம்ம படையும்…
அத தடுத்தா எந்த கரையும் இனி உடையும் உடையும்…

ஆண் : விதையா சின்ன விதையா…
வந்து விழுந்தோம் சிறு துளியா…
சதை கிழிந்தே மெல்ல எழுந்தோம்…
பெரும் மழையா மழையா…

ஆண் : ஆஹா புழுதி உடையாய் அணிந்தே…
வியர்வை நெடியால் குனிந்தே…
குருதி வழியா வரைந்தோம்…
அதுதான் உலகே…

ஆண் : ஆஹா… விடியும் விடியும் என்றே…
இருளில் கிடந்தோம் இன்றே…
ஒளியை திறந்தோம் ஒன்றாய் சேர்ந்தே சேர்ந்தே…

குழு : நிலமே எங்க உரிமை…
நிலமே எங்க உரிமை… உரிமை உரிமை…
நிலமே எங்க உரிமை…
நிலமே எங்க உரிமை… உரிமை உரிமை…

குழு : யார் வச்சது யார் வச்சது உன் சட்டமடா…
இங்க வாழ்வென்பதும் சாவென்பதும் நிலம் மட்டுமடா…

ஆண் : நிலமே… எங்கள் உரிமை…

—BGM—

ஆண் : ஆளவும் வழி இல்லடா…
அடிமையும் நீ இல்லடா…
காடெல்லாம் மேடெல்லாம் முளைச்சது உன் நிலம் டா…
அடங்கி வாழ்ந்தாக்கா முடியாதம்மா…
உரிமையை வாங்காம உயிர் போகுமா…

ஆண் : எழுந்து வாடா வாடா…
எதிர்த்து நீ கேளுடா…
பயந்தா ஆகாதுடா…
இனமே உன் கூடத்தான்…
நெலத்தை மீட்டுக்கலாம்…
நிலமை மாத்திக்கலாம்…
ஒன்னாக இருந்தா இனி நம்ம காலம்தான்…

குழு : நிலமே எங்க உரிமை…
நிலமே எங்க உரிமை… உரிமை உரிமை…
நிலமே எங்க உரிமை…
நிலமே எங்க உரிமை… உரிமை உரிமை…

—BGM—

ஆண் : வண்ணங்கள தீட்டு…
இது வானவில்லின் கூத்து…
அட சொந்தம் எது கேட்டா…
அந்த விண்மீன காட்டு…

ஆண் : கதவில்லாத கூட்டில்…
கனவுகள் ஏராளம் உண்டு…
உரிமைக்கு ஒன்றாகும் வீட்டில்…
விடுதலை எப்போதும் உண்டு…

ஆண் : அதிகாரம் தொட்டு…
நினைப்ப மாத்தி காட்டு…
உழைக்கும் கைகளுக்கே நாடு நாடு…
அடக்கும் காலமில்ல…
நமக்கும் வேலி இல்ல…
வெடித்து போராடலாம் பயமே இல்ல…

குழு : நிலமே எங்க உரிமை…
நிலமே எங்க உரிமை… உரிமை உரிமை…
நிலமே எங்க உரிமை…
நிலமே எங்க உரிமை… உரிமை உரிமை…

ஆண் : உரிமை…

குழு : யார் வச்சது யார் வச்சது உன் சட்டமடா…
இங்க வாழ்வென்பதும் சாவென்பதும் நிலம் மட்டுமடா…

—BGM—

ஆண் : உரிமையை மீட்போம்…
உரிமையை மீட்போம்…
உரிமையை மீட்போம்…

குழு : யார் வச்சது யார் வச்சது உன் சட்டமடா…
இங்க வாழ்வென்பதும் சாவென்பதும் நிலம் மட்டுமடா…

ஆண் : உரிமை மீட்போம்…
குழு : மீட்போம் மீட்போம் மீட்போம்…
உரிமையை மீட்போம்…

ஆண் : உரிமையை மீட்போம்…
குழு : மீட்போம் மீட்போம் மீட்போம்…
உரிமையை மீட்போம்…

ஆண் : உரிமையை மீட்போம்…
உரிமையை மீட்போம்…

குழு : யார் வச்சது யார் வச்சது உன் சட்டமடா…
இங்க வாழ்வென்பதும் சாவென்பதும் நிலம் மட்டுமடா…


Notes : Urimayai Meetpom Song Lyrics in Tamil. This Song from Kaala (2018). Song Lyrics penned by Arivu. உரிமையை மீட்போம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading