உலவிரவு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிகார்த்திக்கார்த்திக்ஆல்பம் சாங்ஸ்

Ulaviravu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தூரத்து காதல் ஓ என் கோப்பை தேநீர் அல்ல…
விண் முத்தம் ஏதும் உன் மெய் முத்தம் போலே அல்ல…

—BGM—

ஆண் : நேரில் நீ நிற்பாயா…
என் ஆசை எல்லாமே கேட்பாயா…
என் கை கோர்ப்பாயா…

ஆண் : ஹோ ஹோ ஹோ… காதலி நீ என்னோடு வா உலவிரவு…
ஹோ ஹோ ஹோ… காதலி நீ என்னோடு வா உலவிரவு…

ஆண் : காலத்தை கொஞ்சம் ஹே பின் நோக்கி ஓட சொல்லு…
வேகங்கள் வேண்டும் ஹே பெண்ணே நீ கொஞ்சம் நில்லு…

ஆண் : என் கண்ணை பார்ப்பாயா…
என் காதல் கோரிக்கை கேட்பாயா…
என் கை கோர்பாயா…

ஆண் : ஹோ ஹோ ஹோ… காதலி நீ என்னோடு வா உலவிரவு…
ஹோ ஹோ ஹோ… காதலி நீ என்னோடு வா உலவிரவு…

—BGM—

ஆண் : பேருந்தில் ஏறி பெருந்தூரம் சென்று…
தெரியாத ஊரில் நடப்போமே இன்று…

ஆண் : நமக்கு பிடிக்க கலைகள் ரசித்து…
வேதியல் இயற்பியல் கணிதம் படித்து…

ஆண் : விழியில் சுடர் ஆட…
ஒலி நாடா பாட…
உன் விழியில் நானும்…
என் வாழ்க்கையினை தேட

ஆண் : ஹோ ஹோ ஹோ… காதலி நீ என்னோடு வா உலவிரவு…
ஹோ ஹோ ஹோ… காதலி நீ என்னோடு வா உலவிரவு…

—BGM—

ஆண் : கூடாரம் போட்டு குளிர் காய்ந்த பின்னே…
விண்மீன்கள் எண்ணி துயில்வோமா பெண்ணே…

ஆண் : கொட்டும் அருவியில்
கட்டி கொண்டே குளிப்போம்…
நீர் வலை பிடித்து தீயில்
வாட்டி சமைப்போம்…

ஆண் : குறும் பார்வை வேண்டும்…
குறும் செய்தி அல்ல…
கை பேசி வீசி…
நாம் கை வீசி செல்ல…

ஆண் : ஹோ ஹோ ஹோ… காதலி நீ என்னோடு வா உலவிரவு…
ஹோ ஹோ ஹோ… காதலி நீ என்னோடு வா உலவிரவு…

ஆண் : தூரத்து காதல் ஹே என் கோப்பை தேநீர் அல்ல…
விண் முத்தம் ஏதும் உன் மெய் முத்தம் போலே அல்ல…

—BGM—

ஆண் : நேரில் நீ நிற்பாயா…
என் ஆசை எல்லாமே கேட்பாயா…
என் கை கோர்ப்பாயா…
என் கை கோர்ப்பாயா…
என் கை கோர்ப்பாயா…
என் கை கோர்ப்பாயா…


Notes : Ulaviravu Song Lyrics in Tamil. This Song from Album Songs (2018). Song Lyrics penned by Madhan Karky. உலவிரவு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading