எஞ்சாய் எஞ்சாமி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்ஆல்பம்
அறிவுஅறிவு & தீசந்தோஷ் நாராயணன்ஆல்பம்

Enjoy Enjaami Song Lyrics in Tamil


—BGM—

பெண் : குக்கூ குக்கூ…
தாத்தா தாத்தா களவெட்டி…
குக்கூ குக்கூ…
பொந்துல யாரு மீன்கொத்தி…

பெண் : குக்கூ குக்கூ…
தண்ணியில் ஓடும் தவளக்கி…
குக்கூ குக்கூ…
கம்பளி பூச்சி தங்கச்சி…

பெண் : அள்ளி மலர்க்கொடி அங்கதமே…
ஒட்டரே ஒட்டரே சந்தனமே…
முல்லை மலர்க்கொடி முத்தாரமே…
எங்கூரு எங்கூரு குத்தாலமே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : சுருக்கு பையம்மா…
வெத்தலை மட்டையம்மா…
சொமந்த கையம்மா…
மத்தளம் கோட்டுயம்மா…

ஆண் : தாயம்மா தாயம்மா…
என்ன பண்ண மாயம்மா…
வள்ளியம்மா பேராண்டி…
சங்கதியை கூறேண்டி…
கண்ணாடியே காணோடி…
இந்தர்ரா பேராண்டி…

ஆண் & பெண் : அன்னைக்கிளி அன்னைக்கிளி…
அடி ஆலமரக்கிளை வண்ணக்கிளி…
நல்லபடி வாழச்சொல்லி…
இந்த மண்ணை கொடுத்தானே பூர்வகுடி…

ஆண் & பெண் : கம்மங்கரை காணியெல்லாம்…
பாடி திரிஞ்சானே ஆத்திச்சூடி…
நாய் நரி பூனைக்கெல்லாம்…
இந்த ஏரிகுளம் கூட சொந்தமடி…

ஆண் & பெண் : எஞ்சாய் எஞ்சாமி…
வாங்கோ வாங்கோ ஒன்னாகி…
அம்மா ஏ அம்பாரி…
இந்தா இந்தா மும்மாரி…

ஆண் & பெண் : எஞ்சாய் எஞ்சாமி…
வாங்கோ வாங்கோ ஒன்னாகி…
அம்மா ஏ அம்பாரி…
இந்தா இந்தா மும்மாரி…

பெண் : குக்கூ குக்கூ…
முட்டைய போடும் கோழிக்கு…
குக்கூ குக்கூ…
ஒப்பனை யாரு மயிலுக்கு…

பெண் : குக்கூ குக்கூ…
பச்சையை பூசும் பாசிக்கு…
குக்கூ குக்கூ…
குச்சிய அடுக்குன கூட்டுக்கு…

ஆண் : பாடுபட்ட மக்கா…
வரப்பு மேட்டுக்காரா…
வேர்வத்தண்ணி சொக்கா…
மினுக்கும் நாட்டுக்காரா…

ஆண் : ஆக்காட்டி கருப்பட்டி…
ஊதங்கொழு மண்ணுச்சட்டி…
ஆத்தோரம் கூடுகட்டி…
ஆரம்பிச்ச நாகரீகம்…

ஆண் : ஜன் ஜனே ஜனக்கு ஜனே மக்களே…
உப்புக்கு சப்பு கொட்டி…
முட்டைக்குள்ள சத்துக்கொட்டு…
அடக்கி ரத்தங்கொட்டு…
கிட்டிப்புள்ளு வெட்டு வெட்டு…

பெண் : நான் அஞ்சு மரம் வளர்த்தேன்…
அழகான தோட்டம் வச்சேன்…
தோட்டம் செழிச்சாலும்…
என் தொண்டை நனையலேயே…

பெண் : என் கடலே கரையே…
வனமே சனமே…
நிலமே குளமே…
இடமே தடமே…

ஆண் & பெண் : எஞ்சாய் எஞ்சாமி…
வாங்கோ வாங்கோ ஒன்னாகி…
அம்மா ஏ அம்பாரி…
இந்தா இந்தா மும்மாரி…

ஆண் & பெண் : எஞ்சாய் எஞ்சாமி…
வாங்கோ வாங்கோ ஒன்னாகி…
அம்மா ஏ அம்பாரி…
இந்தா இந்தா மும்மாரி…

—BGM—

பெண் : பாட்டன் பூட்டன் காத்த பூமி…
ஆட்டம் போட்டு காட்டும் சாமி…
ராட்டினந்தா சுத்தி வந்தா…
சேவ கூவுச்சு…

பெண் : அது போட்டு வச்ச எச்சம்தானே…
காடா மாறுச்சு…
நம்ம நாடா மாறுச்சு…
இந்த வீடா மாறுச்சு…

பெண் : என்ன கொரை என்ன கொரை…
என் சீனி கரும்புக்கு என்ன கொரை…
என்ன கொரை என்ன கொரை…
என் செல்ல பேராண்டிக்கு என்ன கொரை…

பெண் : பந்தலுல பாவக்கா…
பந்தலுல பாவக்கா…
வெதகள்ளு விட்டுருக்கு…
அது வெதகள்ளு விட்டுருக்கு…
அப்பன் ஆத்தா விட்டதுங்க…
அப்பன் ஆத்தா விட்டதுங்க…

—BGM—

ஆண் & பெண் : எஞ்சாய் எஞ்சாமி…
வாங்கோ வாங்கோ ஒன்னாகி…
அம்மா ஏ அம்பாரி…
இந்தா இந்தா மும்மாரி…

ஆண் & பெண் : எஞ்சாய் எஞ்சாமி…
வாங்கோ வாங்கோ ஒன்னாகி…
அம்மா ஏ அம்பாரி…
இந்தா இந்தா மும்மாரி…

ஆண் & பெண் : எஞ்சாய் எஞ்சாமி…
வாங்கோ வாங்கோ ஒன்னாகி…
அம்மா ஏ அம்பாரி…
இந்தா இந்தா மும்மாரி…

ஆண் & பெண் : எஞ்சாய் எஞ்சாமி…
வாங்கோ வாங்கோ ஒன்னாகி…
அம்மா ஏ அம்பாரி…
இந்தா இந்தா மும்மாரி…

பெண் : என் கடலே கரையே…
வனமே சனமே…
நிலமே குளமே…
இடமே தடமே…

பெண் : குக்கூ குக்கூ…

—BGM—


Notes : Enjoy Enjaami Song Lyrics in Tamil. This Song from Album (2021). Song Lyrics penned by Arivu. எஞ்சாய் எஞ்சாமி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading