தட்டான் தட்டான்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிதனுஷ் & மீனாட்சி இளையராஜாசந்தோஷ் நாராயணன்கர்ணன்

Thattaan Thattaan Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தட்டான் தட்டான் வண்டிகட்டி பறந்தேன் கோழி தூவாட்டம்…
ஏ… சொக்கப்பண்ண மேல நின்னு அடிச்சா சூரக்காத்தாட்டம்…

ஆண் : மொட்டப்பாற பூவா வெடிச்சேனே…
உச்சித் தேன வாரிக் குடிச்சேனே…
என் கைரேகை பாத்த பேச்சி…
கத சொன்னாலே நீயே சாட்சி…
நா போற வர பாதையில…
நெருஞ்சி முள்ளை ஒதுக்கும் உம்பார்வ…

ஆண் : ஏ… தட்டான் தட்டான் வண்டிகட்டி பறந்தேன் கோழி தூவாட்டம்…
ஹே… சொக்கப்பண்ண மேல நின்னு அடிச்சா சூரக்காத்தாட்டம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

—BGM—

ஆண் : குதிலுள நெல்லாட்டம் குமியுதே உன் வாசம்…
ஆசையா நீ பாக்க சோறு பொங்கும்…
தெருவுல போனாலும் புழுதியா வந்தாலும்…
தாவணி ராசாவா மாத்த சொல்லும்…

ஆண் : செந்தனலா நெஞ்சிருக்க…
உன் நெனப்பே தூரல் அடிக்கும்…
ஓர் நிழலா நா இருக்க என் நெசமே நீதான்டி…
முத்தத்தை தாயேன் ராசாத்தி…
மொத்தமும் தாரேன் கைமாத்தி…

ஆண் : தட்டான் தட்டான் வண்டிகட்டி பறந்தேன் கோழி தூவாட்டம்…
ஹே… சொக்கப்பண்ண மேல நின்னு அடிச்சா சூரக்காத்தாட்டம்…

—BGM—

பெண் : உழவன் வயலுல இறங்கி…
கூறா நாத்தையும் பிரிச்சு…
பொண்ணா நிலத்தையே காக்கும்…
பெருங்குடியாம் உழக்குடியாம்…

பெண் : பூட்டன் புஞ்சய தொலச்சான்…
பாட்டன் நஞ்சைய தொலச்சான்…
கல்லா கடவுளும் கெடக்க…
காடானோம் கூலிக்குடியானோம்…
ஜெய்ச்சிடு கண்ணு… ஜெய்ச்சிடு கண்ணு…

ஆண் : காக்கா குருவி…
நெதம் கூட்டம்போட்டு…
நம்ம கதைய பேச மேகம் கேட்டு ஏங்குதே…
மழை ஓங்குதே…
ஒடம்பெடுத்து தீக்கொளுத்து…
உயிர் எரிய நனைஞ்சே கெடப்போம்…

ஆண் : தட்டான் தட்டான்…
ஏ… தட்டான் தட்டான்…

ஆண் : ஏ… தட்டான் தட்டான் வண்டிகட்டி பறந்தேன் கோழி தூவாட்டம்…
அட… சொக்கப்பண்ண மேல நின்னு அடிச்சா சூரக்காத்தாட்டம்…
சூரக்காத்தாட்டம்… சூரக்காத்தாட்டம்…

ஆண் : தட்டான் தட்டான்…
தட்டான் தட்டான்…
ஏ… தட்டான் தட்டான்…

—BGM—


Notes : Thattaan Thattaan Song Lyrics in Tamil. This Song from Karnan (2021). Song Lyrics penned by Yugabharathi. தட்டான் தட்டான் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading