உன்னால் முடியும் தம்பி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஉன்னால் முடியும் தம்பி

Unnal Mudiyum Thambi Song Lyrics in Tamil


ஆண் : உன்னால் முடியும் தம்பி தம்பி…
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி…
உன்னால் முடியும் தம்பி தம்பி…
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி…

ஆண் : தோளை உயர்த்து…
தூங்கி விழும் நாட்டை எழுப்பு…
உன் தோளை உயர்த்து…
தூங்கி விழும் நாட்டை எழுப்பு…
எதையும் முடிக்கும் இதயம் உன்னில் கண்டேன்…

ஆண் : உன்னால் முடியும் தம்பி தம்பி…
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நாளைய நாட்டின் தலைவனும் நீயே…
நம்பிகை கொண்டு வருவாயே…
உனக்கென்ன ஓர் சரித்திரமே எழுதும் காலம் உண்டு…

ஆண் : உன்னால் முடியும்…
அட உன்னால் முடியும்…
ஆஹா… உன்னால் முடியும் தம்பி தம்பி…
அட உனக்குள் இருக்கும் உன்னை நம்பி…

BGM

ஆண் : ஆகாய கங்கை காய்ந்தாலும் காயும்…
சாராய கங்கை காயாதடா…
ஆள்வோர்கள் போடும் சட்டங்கள் யாவும்…
காசுள்ள பக்கம் பாயாதடா…

ஆண் : குடிச்சவன் போதையில் நிப்பான்…
குடும்பத்தை வீதியில் வைப்பான்…
தடுப்பது யார் என்று கொஞ்சம் நீ கேளாடா…

ஆண் : கள்ளு கடை காசிலேதான்டா…
கட்சி கொடி ஏறுது போடா…
கள்ளு கடை காசிலே தான்டா…
கட்சி கொடி ஏறுது போடா…
மண்ணோடு போகாமல் நம் நாடு திருந்த செய்யணும்…

ஆண் : உன்னால் முடியும்…
அட உன்னால் முடியும்…
ஆஹா… உன்னால் முடியும் தம்பி தம்பி…
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி…

BGM

ஆண் : கல்லூரி பள்ளி இல்லாத ஊரை…
கையோடு இன்றே தீ மூட்டுவோம்…
கல்லாத பேர்கள் இல்லாத நாடு…
நம் நாடு என்றே நாம் மாற்றுவோம்…

ஆண் : இருக்கிற கோவிலை எல்லாம்…
படிக்கிற பள்ளிகள் செய்வோம்…
அறிவென்னும் கோபுரம் அங்கே நாம் காணுவோம்…

ஆண் : வானம் உங்கள் கைகளில் உண்டு…
ஞானம் உங்கள் நெஞ்சினில் உண்டு…
வானம் உங்கள் கைகளில் உண்டு…
ஞானம் உங்கள் நெஞ்சினில் உண்டு…
நான் என்று எண்ணாமல் நாம் என்று உறவு கொள்ளனும்…

BGM

ஆண் : உன்னால் முடியும்…
அட உன்னால் முடியும்…
ஆஹா… உன்னால் முடியும் தம்பி தம்பி…
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி…

ஆண் : தோளை உயர்த்து…
தூங்கி விழும் நாட்டை எழுப்பு…
உன் தோளை உயர்த்து…
தூங்கி விழும் நாட்டை எழுப்பு…
ஏதையும் முடிக்கும் இதயம் உன்னில் கண்டேன்…

ஆண் : உன்னால் முடியும் தம்பி தம்பி…
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி…


Notes : Unnal Mudiyum Thambi Song Lyrics in Tamil. This Song from Unnal Mudiyum Thambi (1988). Song Lyrics penned by Pulamaipithan. உன்னால் முடியும் தம்பி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading