unnai-naan-song-lyrics-in-tamil-jay-jay

உன்னை நான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன்பரத்வாஜ்ஜே ஜே

Unnai Naan Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன்னை நான் உன்னை நான் உன்னை நான்…
கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன்…
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே…
லட்சம் சிறகுகள் முளைக்குதே…

ஆண் : நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா…
என்னை மெல்ல மெல்ல…
கொல்ல வரும் மோகினியா…

ஆண் : ஜே ஜே… உனக்கு ஜே ஜே…
ஜே ஜே… உனக்கு ஜே ஜே…

ஆண் : உன்னை நான் உன்னை நான் உன்னை நான்…
கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன்…

BGM

ஆண் : சொக்குபொடி கொண்ட சுடர் விழியா…
திக்கி திக்கி வந்த சிறு மொழியா…
எது எது என்னை இழுத்தது நீ சொல்லடி…

ஆண் : 8 மில்லிமீட்டர் புன்னகையா…
முத்து பற்கள் சிந்தும் முதல் ஒளியா…
எது எது என்னை இழுத்தது நீ சொல்லடி…

ஆண் : முகத்தில் இருந்த பிள்ளை குறும்பா…
மூடி கிடந்த ஜோடி திமிரா…

ஆண் : என்ன சொல்ல எப்படி சொல்ல…
எதுகை மோனை கை வசம் இல்ல…

ஆண் : உன்னை எண்ணி கொண்டு…
உள்ளே பற்றி கொண்டு…
உள்ளம் நோகுதடி…
என் உச்சி வேகுதடி…

ஆண் : நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா…
என்னை மெல்ல மெல்ல கொல்ல வரும் மோகினியா…

ஆண் : ஜே ஜே… உனக்கு ஜே ஜே…
ஜே ஜே… உனக்கு ஜே ஜே…

BGM

ஆண் : கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன்…

BGM

ஆண் : மறுமுறை உன்னை சந்திப்பேனா…
மலர் கண்ணுக்குள்ளே வசிப்பேனா…
மழை துளி எங்கே என்று கடல் காட்டுமா…

ஆண் : வெட்கம் இன்றி மண்ணில் அலைவேனே…
ரெக்கை இன்றி விண்ணில் திரிவேனே…
உயிர் எங்கே எங்கே என்று உடல் தேடுமே…

ஆண் : பதறும் இதயம் தோண்டி எடுத்து…
சிதறு தேங்காய் போட்டு முடித்து…
உடைந்த சத்தம் உந்திடும் முன்னே…
எங்கே சென்றாய் எவ்விடம் சென்றாய்…

ஆண் : என்னை காணும் போது…
கண்ணை பார்த்து சொல்லு…
கண்ணே என் போல…
நீயும் காதல் கொண்டாயா…

ஆண் : நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா…
என்னை மெல்ல மெல்ல…
கொல்ல வரும் மோகினியா…

ஆண் : ஜே ஜே… உனக்கு ஜே ஜே…
ஜே ஜே உனக்கு ஜே ஜே…

ஆண் : உன்னை நான் உன்னை நான் உன்னை நான்…
கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன்…
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே…
லட்சம் சிறகுகள் முளைக்குதே…

ஆண் : நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா…
என்னை மெல்ல மெல்ல…
கொல்ல வரும் மோகினியா…

ஆண் : ஜே ஜே… உனக்கு ஜே ஜே…
ஜே ஜே… உனக்கு ஜே ஜே…


Notes : Unnai Naan Song Lyrics in Tamil. This Song from Jay Jay (2003). Song Lyrics penned by Vairamuthu. உன்னை நான் பாடல் வரிகள்.